விஏஓ கொலை வழக்கில் போலீசாரை கைது செய்ய வேண்டும் : ஆட்சியரிடம் பரபரப்பு புகார்!

விஏஓ கொலை

விஏஓ கொலை

NALAIYA VARALARU

விஏஓ கொலை வழக்கில் போலீசாரை கைது செய்ய வேண்டும் : ஆட்சியரிடம் பரபரப்பு புகார்!

கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலர் கொலையில் மணல் கொள்ளையர்களிடம் லஞ்சம் வாங்கிய போலீசாரை கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தாமிரபரணி பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் அளித்துள்ள மனு: கோவில்பத்து கிராம நிர்வாக அலுவலர் லூயிஸ் பிரான்சிசை மணல் கொள்ளையர்கள் நேற்று முன்தினம் பட்டப்பகலில் அலுவலகம் புகுந்து வெட்டிக்கொன்றதன் பின்னணி குறித்து, நேரில் கள ஆய்வு நடத்தி தங்களிடம் முக்கிய தகவல் அளிக்கிறோம். கடந்த சில ஆண்டுகளாகவே முறப்பநாடு போலீசார் உதவியுடன் கலியாவூர், அனந்தநம்பிக்குறிச்சி, மணக்கரை, ஆழிகுடி, செந்நெல்பட்டி, மருதூர் தாமிரபரணி ஆற்றுப் பகுதிகளில் மணல் கொள்ளை நடந்துவந்தது.

நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,

மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,

Please Subscribe to This Channel to get current news ↓

https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ

இதற்கு முன்பு முறப்பநாட்டில் பணியாற்றிய உதவி ஆய்வாளர் சுரேஷ் குமாரும், தற்போது உதவி ஆய்வாளராக இருக்கும் அந்தோணி ராஜும் கையூட்டு பெற்றுக்கொண்டு மணல் கடத்தலை ஊக்குவித்துள்ளனர். அதுமட்டுமல்ல, சிறப்பு பிரிவு போலீசாரும் மணல் கொள்ளையில் லஞ்சம் பெற்றுள்ளனர். கடந்த 134.2023ல் கிராம நிர்வாக அலுவலர் லூயிஸ் பிரான்சிஸ் புகாரின்பேரில் ராமசுப்பிரமணியன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனாலும், ஏற்கனவே 10க்கும் மேற்பட்ட வழக்குகளில் தொடர்புடைய அவரை கைது செய்யாமல் சுதந்திரமாக விட்டுள்ளனர்.

அதற்காக போலீசாருக்கு ரூ.35,000 லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளது சம்பவத்தன்று (26.4.2023) காலையில் கூட ராமசுப்பிரமணியன் காவல் நிலையத்துக்கே சென்று பேசியுள்ளார். அவரை கைது செய்யவில்லை, மாறாக, கிராம நிர்வாக அலுவலர் உன்னை கைது செய்ய வேண்டும் என்று வற்புறுத்துகிறார் என்று, லூயிஸ் பிரான்சிசை காட்டிக்கொடுத்து அவர் மீது பழியை போட்டுள்ளனர்.அதனால் ஆத்திரமடைந்த ராமசுப்பிரமணியன், கிராம நிர்வாக அலுவலகம் சென்று அலுவலரை வெட்டிக் கொன்றுள்ளார்.

இவையனைத்தும் முறப்பநாடு போலீசாருக்கும் சிறப்பு பிரிவுக்கும் தெரியும். முன்னெச்சரிக்கையாக அவரை கைது செய்திருந்தால் இந்தக் கொலையை தடுத்திருக்க முடியும். அதுமட்டுமின்றி, கொலை நடந்த கிராம நிர்வாக அலுவலகம் காவல் நிலையத்திலிருந்து நேரெதிரே சுமார் 100 மீட்டர் தூரத்தில்தான் உள்ளது. காவல் நிலையம் இயங்கிக்கொண்டிருந்த நேரத்தில் அங்கு சென்று சாவதானமாக கிராம நிர்வாக அலுவலரை வெட்டிக்கொன்றுள்ளனர்.

எனவே, கிராம நிர்வாக அலுவலர் லூயிஸ் பிரான்சிஸ் கொலை வழக்கில் முறப்பநாடு இன்ஸ்பெக்டர் ஜமால், சப் இன்ஸ்பெக்டர் அந்தோணிராஜ். சிறப்பு பிரிவு ஏட்டு மகாலிங்கம் ஆகியோரையும் விசாரித்து நடவடிக்கை எடுக்கவேண்டும். அவர்களின் கைபேசிகளை கைப்பற்றி, அழைப்பு விவரங்களை பார்க்க வேண்டும். காவல் நிலைய காமிரா பதிவுகளை ஆய்வு செய்ய வேண்டும். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரடி பார்வையில், அப்பகுதியில் மணல் கொள்ளை நடக்காமலிருக்க தனிப்படை அமைக்கப்படவேண்டும்.” இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாளைய வரலாறு செய்திகளுக்காக

ஶ்ரீவைகுண்டம் நிருபர்
-முத்தரசு கோபி.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Follow by Email
Instagram
Telegram
WhatsApp