கோவை மாவட்டம் வால்பாறை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பகத்தில் மழைக்காலத்துக்கு முந்தைய வனவிலங்கு கணக்கெடுப்பு பணி தொடங்கி உள்ளது. கோவை மாவட்டம் ஆனைமலை புலிகள் காப்பகத்தில் வால்பாறை, மானாம்பள்ளி, உலாந்தி, பொள்ளாச்சி, மற்றும் உடுமலை, அமராவதி என உள்ளிட்ட 6 வன சரகங்கள் உள்ளன. இதில் காட்டு யானை, சிறுத்தை, புலி, மான், காட்டு எருமை மற்றும் அரிய வகையான பறவைகளும் என பலதரப்பட்ட வனவிலங்குகள் உள்ளன. ஆண்டுதோறும் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி மழைக்கு முந்தைய வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி நடைபெறும். அதேபோல், இந்த ஆண்டுக்கான மழைக்கு முந்தைய வனவிலங்குகள் கணக்கெடுக்கும் பணி இன்று தொடங்கி வரும் 29ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதில் பொள்ளாச்சி வனக்கோட்டத்திற்கும் உடுமலை வனக்கோட்டத்திற்கும் உட்பட்ட 6 வனச்சரகங்களில் 115 நேர்கோட்டுப் பாதை அமைக்கப்பட்டு 460 வனத்துறை ஊழியர்கள் கணக்கெடுக்கும் பணியில் ஈடுபடுத்தப் பட்டுள்ளனர். இந்த பணியில், வால்பாறை, மானாம்பள்ளி வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் கணக்கெடுப்பு பணியில், மாமிச உண்ணி, தாவர உண்ணி சார்ந்த வனவிலங்குகளின் கால் தடங்கள், எச்சங்கள், நகக்கீறல்கள், நேரடிப் பார்வை என தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் உத்தரவுப்படி மொபைல் போன் ஜிபிஎஸ் மூலம் பதிவு செய்து கணக்கெடுக்கும் பணியில் வனத்துறை ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர். 8 நாட்கள் நடைபெறும் இந்த வனவிலங்கு கணக்கெடுப்பில் முதல் நாள் கணக்கெடுப்பில் ஈடுபட்ட வனத்துறை ஊழியர்களுக்கு அட்டகட்டி பயிற்சி மையத்தில் கணக்கெடுப்பு குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.