தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் யூனியன் அலுவலகத்தில் நேற்று பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு சண்முகலட்சுமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தின் முக்கிய நோக்கம் தமிழக மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு திட்டம் மூலம் தமிழக அரசே நடைமுறைப்படுத்த வேண்டும், சத்துணவு திட்டத்தில் உள்ள பல்லாயிரக்கணக்கான காலிப்பணியிடங்களை நிரப்பிடவேண்டும்,சத்துணவு-அங்கன்வாடி ஓய்வூதியர்களுக்கு சட்டப்படியான ஓய்வூதியம் ரூ 6750/ வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் தணிக்கையாளர் அ.பாக்கியசீலி விளக்கவுரையாற்றினார். சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க தூத்துக்குடி மாவட்ட தலைவர் கோ.உத்தண்டராமன் வாழ்த்துரை வழங்கினார்.
TNNMAPA மாநில துணைப்பொதுச்செயலாளர் ஜெகவீரபாண்டிய கட்டபொம்மன் நிறைவுரையாற்றினார்.TNNMEA மாவட்ட இணைச் செயலாளர் தோழர் மஞ்சுளா நன்றி கூறினார் மற்றும் பல்வேறு ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-முனியசாமி, ஓட்டப்பிடாரம்.