கோவை மாநகர பகுதிக்குட்பட்ட ஆர்.எஸ்.புரம், செல்வபுரம், குனியமுத்தூர், பீளமேடு பகுதிகளில் நேற்று காவல்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பொழுது வெவ்வேறு பகுதிகளில் சந்தேகம்படும்படி நின்றிருந்த இளைஞர்களை பிடித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட கல்லூரி மாணவர்கள் கோவை கணபதி மாநகரை சேர்ந்த சயீத் அஜீஸ் (21), தேனி காமராஜர் புரத்தை சேர்ந்த மாதேஷ்வரன் (20), பெட்டிக்கடைக்காரர் போத்தனூர் சாரதா மில் ரோட்டை சேர்ந்த மன்சூர் (41) மற்றும் தொழிலாளிகள் தென்காசி மாவட்டத்தை சேர்ந்த பிரேம் சந்த் (22), உடையாம்பாளையம் அசோக் தெருவை சேர்ந்த பிரதீப் (24), அரவிந்த் (20), சவுரிபாளையத்தை சேர்ந்த முருகன் (25), வினோத்குமார் (23), நந்தகுமார் (22) மற்றும் ராமநாதபுரத்தை சேர்ந்த சதீஷ்குமார் (24) ஆகிய 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து 2.5 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.
-M.சுரேஷ்குமார்.