கேரளாவில் படகு கவிழ்ந்து விபத்து!!
கேரள மாநிலம் மலப்புரத்தில் சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது.
கேரள மாநிலம் மலப்புரம் அருகே உள்ள தனூர் ஒட்டம்பூர் துவால்திரா என்ற பகுதியில் பயணித்த சுற்றுலா படகு, மாலை 7 மணியளவில் எதிர்பாராத விதமாக கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியது.
25 பேர் மட்டுமே செல்லவேண்டிய படகில் 40 பேரை ஏற்றிச் சென்றதே படகு கவிழக் காரணம் என்று கூறப்படுகிறது.
இந்த படகு விபத்தில் மூழ்கி 6 குழந்தைகள், பெண்கள் உள்பட 22 பேர் உயிரிழந்தனர்.
மேலும் சில பயணிகள் கடலில் மூழ்கி மாயமான நிலையில் அவர்களை தேடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் படகு கவிழ்ந்து உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, அவர்களின் குடும்பங்களுக்கு தலா 2 லட்சம் நிவாரணம் அறிவித்துள்ளார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
சுற்றுலாப் படகு கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளான காரணம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-அருண்குமார் கிணத்துக்கடவு.