கோவையில் லுலு ஹைப்பர் மார்க்கெட் விரைவில் திறப்பு!!
ஐக்கிய அரபு அமீரகத்தைத் தலைமையிடமாகக் கொண்ட லுலு நிறுவனம் இந்தியாவில் கொச்சி, திருவனந்தபுரம், பெங்களூரு, லக்னோ உள்ளிட்ட நகரங்களில் ஹைப்பர் மார்க்கெட்களை அமைத்துள்ளது.
தமிழகத்தில், சென்னை மற்றும் கோவையில் ஹைப்பர் மார்க்கெட்களை அமைக்கிறது. கோவையில் அவிநாசி ரோடு, லட்சுமி மில் வளாகத்தில் 1.20 லட்சம் சதுர அடி பரப்பில் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ள நிலையில், ஓரிரு வாரங்களில் திறப்பு விழா நடைபெறவுள்ளது.
கோவை லுலு ஹைப்பர் மார்க்கெட் நிர்வாகத்தினர் கூறியதாவது:
மிகச்சிறந்த ஷாப்பிங் அனுபவத்தை இந்த மார்க்கெட் தரும். தரைத்தளத்தில் மட்டுமே ஷாப்பிங் பகுதி அமைந்துள்ளது.
மளிகை, காய்கறி, பழங்கள், சைக்கிள் உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்கள், பிட்னஸ், அழகுசாதனம், எலக்ட்ரானிக்ஸ், எலக்ட்ரிகல், மெத்தை, வீட்டு உபயோக பிளாஸ்டிக் பொருட்கள், எழுதுபொருட்கள், குழந்தைகளுக்கான பொம்மைகள், புத்தக பைகள், லக்கேஜ் , கண் கண்ணாடி என, ஒரு வீட்டுக்குத் தேவையான அனைத்து உள்நாட்டு, வெளிநாட்டு தயாரிப்புகளையும் ஒரே இடத்தில் வாங்கலாம்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
காய்கறிகளைப் பொறுத்தவரை விவசாயிகளிடம் இருந்து நேரடி கொள்முதல் செய்கிறோம். ஒவ்வொரு பொருளிலும் உலகின் முன்னணி பிராண்ட்களின் வெவ்வேறு ரகங்கள், வேறெங்கும் இல்லாத அளவுக்கு இங்கு கிடைக்கும். உதாரணமாக, ஆரஞ்சு பழம் எனில் உள்நாடு, வெளிநாடு குறைந்தது 6 ரகங்கள் கிடைக்கும்.
வளைகுடா, ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட அரபு நாடுகளில் இருந்து பிரத்யேகமாக தருவிக்கப்பட்ட பொருட்கள் கிடைக்கும்.
பில் போடுவதற்காக காத்திருக்கத் தேவையில்லை. 28 கவுன்டர்கள் உள்ளன தவிர, இரு எக்ஸ்பிரஸ் கவுன்டர்கள் உள்ளன.
உணவுப் பிரிவைப் பொறுத்தவரை சைவம், அசைவம், உள்ளூர் உணவுகள் முதல் ‘கான்டினென்டல்’ உணவுகள், பீட்சா வரை அனைத்தும் கிடைக்கும்.
தவிர, நொறுக்குத் தீனிகள், சாட் வகைகள், பேக்கரி என அனைத்தும் தனித்தனி அரங்குகளில் கிடைக்கும்.
அரேபிய உணவு வகைகளும் கிடைக்கும். அரேபிய உணவான ‘குபூஸ்’ வாடிக்கையாளர் கண் முன் தயாரிக்கப்பட்டு, அங்கேயே பரிமாறப்படும். தவிர, வெளிநாட்டு ஸ்வீட்களையும் ருசிக்கலாம்.
ஆடு, கோழி, மீன், காடை, முயல், வாத்து உள்ளிட்ட இறைச்சி வகைகளும் பிரெஷ்ஷாக கிடைக்கும்.
பெண்களுக்கு சர்வதேச பிராண்டுகள் உட்பட அனைத்து முன்னணி நிறுவனங்களின் அழகுசாதனப் பொருட்களும் கிடைக்கும். இங்கேயே அமர்ந்து மேக்அப் போட்டு பார்க்கும் வசதியும் உண்டு.
கோவையைப் பொறுத்தவரை பார்க்கிங் பெரும் பிரச்னை. இங்கு குறைந்தது 300 கார்கள் நிறுத்தலாம். ஏராளமான பைக்குகளையும் நிறுத்தலாம். இந்த வளாகத்தில் வாகன பார்க்கிங் செய்ய இடம் ஒரு பிரச்னையே இல்லை.
அனைத்துப் பணிகளும் நிறைவடைந்து விட்டன. ஓரிரு வாரங்களில் ஹைப்பர் மார்க்கெட் திறக்கப்படும்.
கோவைவாசிகளின் சர்வதேச அளவிலான ஷாப்பிங் அனுபவத்துக்கும், தரமான பொருட்களுக்கும் லுலு உத்தரவாதம் அளிக்கிறது. இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.
நாளைய வரலாறு செய்திக்காக
-ஹனீப் கோவை
கோவை தெற்கு மாவட்ட
தலைமை நிருபர்