கோவை ஏ.ஜே.கே கலை அறிவியல் கல்லூரியில் தி கிரேட் இந்தியன் கிச்சன் கார்னிவல் பிரம்மாண்ட உணவு திருவிழா.
28 மாநிலங்களை சேர்ந்த பாரம்பரிய உணவுகளின் சுவை ஒரே இடத்தி்ல்.
கோவை ஏ.ஜே.கே. கலை உணவக மேலாண்மைத் அறிவியல் கல்லூரியின் உணவளிப்பு அறிவியல் மற்றும் துறை சார்பாக பிரம்மாண்ட உணவு திருவிழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
தி கிரேட் இந்தியன் கிச்சன் கார்னிவல் 2023 எனும் தலைப்பில் நடைபெற்ற உணவுத் திருவிழாவை கல்லூரியின் இயக்குனர் பிந்து அஜித்குமார் லால் குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.
இந்த உணவுத் திருவிழாவில் இந்தியாவின் 28 மாநிலங்களில் இருந்து சைவ மற்றும் அசைவ உணவுகளில் சுமார் 140 வகையான வட்டார, பாரம்பரிய உணவு வகைகள், பானங்கள் மற்றும் இனிப்புகளும் தனி சுவையுடன் பரிமாறப்பட்டன.ஆரோக்கிய உணவு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, மைக்ரோகிரீன்கள் மற்றும் சிறுதானியங்களால் செய்யப்பட்ட பல்வேறு உணவுகள் மற்றும் அது குறித்த பயன்களும் காட்சி படுத்தப்பட்டன.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தொடர்ந்து பத்தாவது ஆண்டாக நடைபெற்று வரும் உணவு திருவிழா குறித்து கல்லூரியின் தலைவர் அஜீத்குமார் லால் கூறுகையில்; “இந்திய நாட்டின் உணவு மற்றும் கலாச்சாரத்தை போற்றும் வகையில் இந்த திருவிழாவை கலாச்சார விழாவாக நடத்தி வருவதாக தெரிவித்தார். உணவு திருவிழாவில் கூடுதல் அம்சமாக இந்தியாவின் பன்முகத்தை போற்றும் வகையில், பல்வேறு மாநிலங்களின் பாரம்பரிய, நவீன ஆடைகளை அணிந்தபடி மாணவிகளின் ஒய்யார அணிவகுப்பு நடைபெற்றது.. இந்திய பாரம்பரிய உணவு வகைகள்,உடைகள் மற்றும் கலாச்சார நிகழ்வுகள் என அனைத்தும் ஒரே இடத்தில் நடைபெற்ற இந்நிகழ்வை கோவை உட்பட பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் வெகுவாக வரவேற்றுள்ளது குறிப்பிடதக்கது.
-சீனி, போத்தனூர்.