ஆனைமலை புலிகள் காப்பகம் உலாந்தி வனச்சரகம் டாப்சிலிப்பிற்கு விடுமுறை நாட்களில் கோவை மாவட்டம் மட்டுமல்லாது வெளிமாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து யானைகளை பார்த்து ரசித்து செல்கின்றனர்.
யானை சவாரி சென்று வந்தனர் ஆனால் கொரோனா பரவல் காரணமாக கடந்த 2020-ம் ஆண்டு யானை சவாரி நிறுத்தப்பட்டது. ஆனால் அதன்பிறகு சவாரி தொடங்குவதற்கு அனுமதி இல்லாததால் 3 ஆண்டுகளாக யானை சவாரி தொடங்கப்படாமல் உள்ளது. இதனால் டாப்சிலிப் வரும் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைகின்றனர்.
மேலும் யானை சவாரி நடந்த இடம் சுற்றுலா பயணிகள் இல்லாமல் வெறிச்சோடி கிடக்கிறது. எனவே நிறுத்தப்பட்ட யானை சவாரியை தொடக்க வேண்டும் என்று சுற்றுலா பயணிகள் கோரிக்கை வைக்கின்றனர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-சி.ராஜேந்திரன்.