மருந்து கடை உரிமையாளர் மீது ஆசிட் வீச்சு???
கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே உள்ள சிறு தோனி என்ற பகுதியில் மருந்து கடை நடத்தி வரும் லைஜூ என்பவரை இடுக்கி வாழை தோப்பை சேர்ந்த இளைஞர் இரவு 10 மணிக்கு கடையை அடைத்து வீடு திரும்பும் வழியில் வாகனத்தை நிறுத்தி முகத்தில் ஆசிட் வீசி தப்பி சென்றுள்ளார்.
இந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காயம் அடந்தவரை கோலாஞ்செரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்படுகின்றன. உடனடியாக நடவடிக்கை எடுக்க வேணடும் என் அப்பகுதி மக்கள் வேண்டுகோள் வைக்கவே அப்பகுதியின் சி சி டி வி கேமராக்களை அதாரத்தின் அடிப்படையில் ஆசிட் வீசிய இளைஞரை இடுக்கி நகர காவல் துறையினர் கைது செய்தனர்.
மேற்கொண்டு எந்த காரணத்திற்காக ஆசிட் வீசப்பட்டது என்பதை குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
-ஜான்சன்
மூணார்.