தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி சட்ட மன்ற தொகுதியில் கயத்தார் தாலுகா,முடுக்கலான்குளம் கிராமத்தில் ஸ்ரீ காளியம்மன்,ஸ்ரீ கன்னிமூலை வரசக்தி விநாயகர் கோவில் திருவிழாவை முன்னிட்டு 6 ஆம் நாள்,7 ஆம் நாள் நிகழ்ச்சியாக 17 ஆம் ஆண்டு மாபெரும் மாநில அளவிலான மின்னொலி கபடி போட்டி நடைபெற்றது.
இந்த கபாடி போட்டியில் மொத்தம் 40 அணிகள் கலந்து கொண்டனர். இப்போட்டியினை ஊர் நாட்டாமை ஊர் தர்மகத்தாக்கள் தொடங்கி வைத்தனர். இந்த போட்டியில் முதல் பரிசினை S.M.பூமா நினைவு கபாடி குழு முடுக்கலான்குளம் அணி வெற்றி பெற்றது பரிசு கோப்பையை நடராஜன் தமிழ் விவசாய சங்கம் S.M சாமிராஜ் அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் கயத்தார் கிழக்கு வழங்கினார். 2 ஆம் பரிசினை மாவீரன் சுந்தரலிங்கம் மெமோரியல் கிளப் முடுக்கலான்குளம் அணி வென்றது பரிசு கோப்பை கிருஷ்ணா மூர்த்தி SM சுப்புராஜ் தொழிலதிபர் முடுக்காலன்குளம் வழங்கினார்.
3 ஆம் பரிசினை SMC B அணி வென்றது பரிசு கோப்பை கிராம நிர்வாக உதவியாளர் மாரியப்பன் மற்றும் சாமி ராஜ் அம்மா பேரவை ஒன்றிய செயலாளர் கயத்தார் கிழக்கு வழங்கினார். இந்த கபாடி போட்டியில் ஊர் நாட்டாமை முத்து பாண்டி ஊர் தர்மகத்தாக்கள் கோ.காசிராஜன் (மளிகை கடை),S.M.சாமிராஜ் கயத்தார் கிழக்கு ஒன்றிய அம்மா பேரவை ஒன்றிய செயலாளர், கோ.ராஜபாண்டியன் ( வழக்கறிஞர்) த.முத்து செல்வம் இளைஞர்களுக்கு ஊர்பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக ஒட்டப்பிடாரம் நிருபர்
-முனியசாமி.