திப்பு சுல்தான் (1750-1799):
திப்பு சுல்தான், ‘மைசூர் புலி’, ஒரு சிறந்த தொலைநோக்குடையவராக திகழ்ந்தார். அவர் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய சக்திகளின் விரிவாக்க திட்டங்களை அம்பலப்படுத்தினார். ஆங்கிலேயர்களை குலைநடுங்க வைத்த மாவீரனாக வாழ்ந்தார்.
கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிராக ஒன்றிணைந்து போராட தனது சக நாட்டு மக்களுக்கும் பூர்வீக ஆட்சியாளர்களுக்கும் தெளிவான அழைப்பு விடுத்தார். திப்பு 1750 ஆம் ஆண்டு நவம்பர் 10 ஆம் தேதி கர்நாடகா மாநிலம் கோலார் மாவட்டத்தில் உள்ள தேவனஹள்ளி கிராமத்தில் ‘தென்னிந்தியாவின் நெப்போலியன்’ என்று புகழ் பெற்ற ஹைதர் அலிக்கு பிறந்தார், அவருடைய தாயார் பாத்திமா பக்ருன்னிஷா.
.அவர் தற்காப்புக் கலைகளில் முறையான பயிற்சி பெற்றார். அவரது தந்தையுடன் பல போர்களில் பங்கேற்றார். திப்பு 1782 இல் தனது தந்தை ஹைதர் அலியின் மரணத்திற்குப் பிறகு மைசூர் ஆட்சியாளரானார். ஆட்சியாளராக பொறுப்பேற்றபோது அவர் தனது மக்களிடம் கூறினார்:
“நான் உங்களை எதிர்த்தால் , என் வாழ்க்கையையும், என் மகிழ்ச்சியையும் இழக்க நேரிடும். மக்களின் மகிழ்ச்சியே எனது மகிழ்ச்சி. நான் விரும்புவது நல்லது என்று நான் நினைக்கவில்லை. ஆனால், எனது மக்களின் விருப்பம் எதுவோ அதுவே எனது விருப்பம் என்று கருதுகிறேன். என் மக்களின் எதிரிகள் என் எதிரிகள். என் மக்களுக்குத் தொல்லை கொடுப்பவர்கள் எனக்கு எதிராகப் போரைப் பிரகடனப்படுத்துவதாகக் கருதப்படுகிறார்கள்.”
திப்பு தன் வாழ்நாள் முழுவதும் இந்த வாக்குறுதியைக் கடைப்பிடித்தார். ஹைதராபாத் நிஜாம் மற்றும் மராட்டியர்களின் தொடர்ச்சியான தாக்குதல்களை எதிர்கொண்ட போது, திப்பு சுல்தான் தனது ஆளுகையை வடக்கே கிருஷ்ணா நதியிலிருந்து தெற்கே திண்டுக்கல் வரை சுமார் 400 மைல்கள் மற்றும் மேற்கில் மலபாரிலிருந்து கிழக்கு தொடர்ச்சி மலைகள் வரை சுமார் 300 மைல்கள் வரை விரிவுபடுத்தினார்.
திப்பு தனது 17 ஆண்டு கால ஆட்சியில். நவீன வணிகம், தொழில், விவசாயம் மற்றும் கட்டட பொறியில் ஆகியவற்றை ஊக்குவித்தார். அவர் ஏவுகனை தயாரித்தார் என்பதை நாஸா நிறுவனம் அங்கீகரித்துள்ளது.
திப்பு சுல்தான் ஒரு பல்மொழியாளர். அவர் கன்னடம், தெலுங்கு, மராத்தி, அரபு, பாரசீகம், உருது மற்றும் பிரஞ்சு மொழிகளில் நன்கு புலமை பெற்றவர். கல்வி மேம்பாட்டிற்காக கடுமையாக உழைத்தார்.
திப்பு, தனது தந்தையைப் போலவே மதச்சார்பற்ற பார்வையையும் அனைத்து மதத்தவர்களையும் பாரபட்சமற்றமின்றி கவனித்தார்.. சிவகெங்கை சீமையை மீட்க வீரமங்கை வேலுநாச்சாரியருக்கு தனது தந்தையுடன் சேர்ந்து உறுதுணையாக இருந்தார்.
ஆங்கிலேயர்கள் திப்புவை தென்னிந்தியாவின் முதல் எதிரியாக கருதினர். பொறாமை கொண்ட ஹைதராபாத் நிஜாம் மற்றும் மராட்டியர்கள் திப்புவின் வெற்றியை ஜீரணிக்க முடியாமல், அவருக்கு எதிராக கிழக்கிந்திய கம்பெனியுடன் கைகோர்த்தனர். அவர்கள் அனைவரும் மைசூர் மாநிலத்தின் தலைநகரான ஸ்ரீரங்கப்பட்டினத்தைத் தாக்கினர், இது மைசூர் வரலாற்று நான்காவது போருக்கு வழிவகுத்தது.
திப்பு சுல்தான் தனது மக்களையும் அரசையும் காக்க ஸ்ரீரங்கப்பட்டினம் போர்க்களத்தில் நுழைந்தார், எதிரிகள் ஸ்ரீகங்கப்பட்டினம் கோட்டைக்குள் நுழைய வழி வகுத்த அவரது திவான், மீர் சாதிக் மற்றும் பலர் செய்த துரோகத்தால், திப்பு சுல்தான் தோல்வியை சந்தித்தார். அவர் மே 4, 1799 அன்று போர்க்களத்தில் எதிரிக்கு எதிராக போராடி வீரமரணமடைந்தார். ஆங்கிலேயர்களை போர்களத்தில் நேரெதிராக சந்தித்து வீரமரணமடைந்த ஒரே இந்திய மன்னர் திப்பு சுல்தான் மட்டுமே.
வரலாறுகளை அறிந்து கொள்வோம்!!
நாளைய வரலாறு செய்திக்காக,
-ஹனீப், கோவை.