வால்பாறையில் கால்பந்து விளையாட்டு முகாம் ஒரு சிறப்பு பார்வை!!
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த வால்பாறையில் சிறுவர், சிறுமிகளுக்கான கால்பந்து விளையாட்டு முகாம் கடந்த 06.05.2023 சனிக்கிழமை முதல் வால்பாறை நகராட்சி கால்பந்து விளையாட்டு மைதானத்தில் நடைபெற்று வருகிறது.
இம்முகாமில் சிறுவர், சிறுமிகள் மிகுந்த ஆர்வத்துடன் கலந்துகொண்டு பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோல் பயிற்சியாளரும் குழந்தைகளுக்கு மிகச் சிறப்பாக பயிற்சி கொடுத்து வருகிறார்.
இம்முகாம் பயிற்ச்சியாளர் திரு. மாசானி அவர்கள் தலைமையில் நடைபெற்று வருகிறது.
முகாமில் குழந்தைகளுக்கு கால்பந்து விளையாட்டு பயிற்சியை தொடர்ந்து நல்லொழுக்க பயிற்ச்சியும் வழங்கப்பட்டு வருகிறது என்பது கூடுதல் சிறப்பு.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மேலும் இந்த முகாம் 06-05-2023 சனிக்கிழமை முதல் 25-05-2023 வரை தினசரி காலை 6.30 முதல் 8.00 மணி வரையிலும் இதனைத் தொடர்ந்து மாலை 5.00 மணி முதல் 6.00 மணி வரையிலும் வால்பாறை நகராட்சி கால்பந்து மைதானத்தில் நடைபெற உள்ளது.
இந்த சிறப்புமிக்க கால்பந்து விளையாட்டு முகாமில் சிறுவர், சிறுமிகள் கலந்து கொள்ள
அழைப்பு விடுத்துள்ளனர் வால்பாறை கால்பந்து சங்கத்தினர்.
இது குறித்து விரிவான தகவலுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்
9080338494,
9080372923,
9363003307,
9626078578,
9488415047
மேலும் இப்ப பயிற்சியில் கலந்து கொண்டு பயிற்சியை சிறப்பாக முடித்த வீரர் (சிறுவர்) வீராங்கனை (சிறுமி) ஆகியோருக்கு கால்பந்து சங்கத்தின் சார்பாக சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
தகவல்:
செய்யது அலி வால்பாறை, இவருடன் செய்தியாளர்
-M.சுரேஷ்குமார்.