கோவை மாவட்டம் வால்பாறையில் தற்பொழுது கோடை விழா தொடங்கி சிறப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
கோடை விழாவின் ஒரு பகுதியாக பொள்ளாச்சி என்.ஜி.எம் கல்லூரி மற்றும் கோவை குமரகுரு கல்வி நிறுவனம் ஆகியவை இணைந்து வால்பாறையில் நடைபெற்று வரும் கோடை விழாவில் கால்பந்து போட்டியை நடத்த திட்டமிட்டு இருந்தனர்.
அதன்படி இன்று வால்பாறையில் கால்பந்து போட்டி தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த கால்பந்து போட்டியை சுற்றுலா பயணிகள் மற்றும் வால்பாறை பகுதி பொதுமக்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் அனைவரும் கண்டு ரசித்து வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-சி.ராஜேந்திரன்.