முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2ம் படை வீடும், கடற்கரை ஓரத்தலமும் ஆனது திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில். விடுமுறை காலங்களிலும் சரி, விசேஷ நாட்களிலும் சரி, ஆயிரக்கணக்கான பக்தர்களும் சுவாமி தரிசனத்திற்காக வந்து செல்கின்றனர். கடலில் புனித நீராடிவிட்டு, அதற்கு பிறகு, முருகப் பெருமானை வழிபட்டு செல்வது பக்தர்களின் வழக்கம். அப்படித்தான், இந்த கோடையில் விடுமுறை நாட்கள் என்பதாலும், நேர்த்திக்கடனை செலுத்திடவும், நாட்களிலும் பொதுமக்கள் திருச்செந்தூரில் குவிந்து வருகிறார்கள்.
அந்தவகையில், தேனி மாவட்டம் லட்சுமிபுரத்தை சேர்ந்த இந்திரா என்பவர், தன்னுடைய குடும்பத்துடன் திருச்செந்தூருக்கு சென்று கடலில் புனித நீராடினார். அப்போது, இந்திரா கையில் அணிந்திருந்த ஒன்றரை சவரன் தங்க வளையல், கடல்நீரில் மாயமாகிவிட்டது.. இதனால் இந்திரா தங்க நகையை காணாமல் பதறிப்போனார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதனிடையே, கடலில் சிப்பி அரித்து கொண்டிருந்த தொழிலாளர்களிடம், தங்க வளையல் கிடைத்திருக்கிறது.. அது குறித்து விசாரித்தபோதுதான், அது இந்திரா தவறவிட்ட வளையல் என்பது தெரியவந்தது.. அதற்கு பிறகு, வளையலை இந்திராவிடம் சிப்பி அரிக்கும் தொழிலாளர்கள் கொண்டுவந்து பத்திரமாக ஒப்படைத்தனர்.
இப்படித்தான் சில மாதங்களுக்குமுன்பு, திருப்பூரைச் சேர்ந்த ரஜினிகாந்த் என்பவர் குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்வதற்காக வந்திருந்தார்.. அப்போது கடலில் குளித்துவிட்டு வெளியே வந்து பார்த்தபோது தன் கழுத்தில் அணிந்திருந்த 10 பவுன் தங்கச் சங்கிலி காணாமல் போயிருப்பதை பார்த்து அதிர்ந்து போனார்.. கோயிலில் உள்ள காசி விஸ்வநாதன் என்கிற அர்ச்சகரிடம் தன்னுடைய தங்கச் சங்கிலி கடலில் காணாமல் போனது பற்றி அதிர்ச்சியுடன் கூறினார்.
அதற்கு அந்த அர்ச்சகர், “உங்க தங்க செயின் எங்கேயும் போகாது. முருகன் மேல பாரத்தை போட்டுட்டு மனமுருக வேண்டுங்க கிடைச்சிடும்” என்றார். அதற்கு பிறகு, கடலில் சிப்பி அரிக்கும் தொழிலாளர்கள் 40 பேர், தொடர்ந்து 8 மணி நேரம் கடலில் மூழ்கிக் காணாமல் போன 10 பவுன் தங்கச்சங்கிலியை தேடினர். இறுதியில், பார்த்திபன் என்ற சிப்பி அரிக்கும் தொழிலாளியின் அந்த தங்கச்சங்கிலி கிடைத்தது.
அது ரஜினிகாந்த் தவறவிட்டது என்பது தெரியவந்ததையடுத்து அவரிடம் ஒப்படைத்தார். இதனால் ஆச்சரியப்பட்ட ரஜினிகாந்த், தங்கச்சங்கிலியை தேடிக்கொடுத்த கடல் சிப்பி அரிக்கும் தொழிலாளர்களை, ஆரத்தழுவி கண்ணீர் மல்க தனது நன்றியை தெரிவித்தார்.
கடல்ல செயின் காணாமல் போனதும் ரொம்ப மனம் நொந்துட்டேன். அர்ச்சகர் சொன்னது மாதிரியே எம் பெருமான் முருகனை மனமுருக வேண்டி, நெத்தியில விபூதியை பூசுனேன். 8 மணி நேரத்துல என் செயின் கிடைச்சிடுச்சு. ஓம் முருகா என்று சொன்னபடியே, கோயில் கோபுரம் நோக்கிக் கும்பிட்டார் ரஜினிகாந்த். இப்போது தங்கவளையல் கிடைத்த மகிழ்ச்சியில் இந்திராவும் அப்படித்தான் பூரித்து போய் உள்ளார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-வேல்முருகன், தூத்துக்குடி.