
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே புதியம்புத்தூருக்கு கீழதெருவை சேர்ந்த லட்சுமணன் மனைவி கட்டியம்மாள் (70). இவர் பூ வியாபாரம் செய்து வருகிறார். மேலும் இவரது கணவர் லட்சுமணன் கடந்த சில வருடங்களுக்கு முன்னதாக இறந்து விட்டார். மேலும் இவர் அப்பகுதியில் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் நேற்று புழுக்கம் அதிகமாக இருந்ததால் வீட்டை திறந்த நிலையில் வைத்து தூங்கியுள்ளார்.
மேலும் அதிகாலை மூன்று மணி அளவில் அவரது வீட்டிற்குள் ஏதோ சத்தம் கேட்டுள்ளது. அப்போது மின் விளக்கை போட்டுப் பார்த்தபோது புதியம்புத்தூர் கீழ தெருவை சேர்ந்த நாகராஜன் மகன் மாயகிருஷ்ணன் (23) என்பவர் அவரை தள்ளிவிட்டு ஓடியுள்ளார். தொடர்ந்து கட்டியம்மாள் தனது வீட்டில் வைத்திருந்த பணத்தை பார்த்தபோது சுமார் 5000 பணம் மற்றும் 4 கிராம் மோதிரம் ஆகியவற்றை திருடி சென்றது தெரியவந்தது.
மேலும் புதியம்புத்தூர் நடுவகுறிச்சி பகுதியைச் சேர்ந்த மாசிலாமணி மகன் செல்வராஜ் (44) என்பவர் தனது வீட்டின் முன்பாக இருசக்கர வாகனத்தை நிறுத்தியுள்ளார். இந்நிலையில் சுமார் அதிகாலை சுமார் 4 மணி அளவில் ஏதோ சத்தம் கேட்டு செல்வராஜ் வந்து பார்த்தபோது மாயகிருஷ்ணன் பைக்கை திருடிச் சென்றுள்ளார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மேலும் புதியம்புத்தூர் காவல் நிலையத்தில் மேற்படி கட்டியம்மாள் மற்றும் செல்வராஜ் அளித்த புகாரின் பேரில் புதியம்புத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாலன் மற்றும் போலீசார் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து மேற்படி எதிரி மாயகிருஷ்ணனை வலை வீசி தேடி வந்தனர்.
இந்நிலையில் புதூர் பாண்டியபுரம் பாலம் அருகே புதியம்புத்தூர் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மாயகிருஷ்ணன் போலீசாரை கண்டதும் தப்பி ஓடி உள்ளார். தொடர்ந்து போலீசார் மாயகிருஷ்ணனை விரட்டிச் சென்று பிடித்து மாயகிருஷ்ணனை புதியம்புத்தூர் காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் மேற்படி செல்வராஜ் என்பவரது வீட்டில் இரு சக்கர வாகனத்தையும் கட்டியம்மாள் என்பது வீட்டில் ரூபாய் 5000 மற்றும் 4 கிராம் மோதிரத்தையும் திருடியதை ஒப்புக்கொண்டுள்ளார்.
இதையடுத்து போலீசார் மாயகிருஷ்ணனை கைது செய்து அவரிடமிருந்து இரு சக்கர வாகனம் ரூபாய் 4000 மற்றும் நான்கு கிராம் மோதிரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். ஏற்கனவே மாயகிருஷ்ணன் மீது புதியம்புத்தூர் திருச்செந்தூர் உள்ளிட்ட காவல் நிலையங்களில் நான்கு திருட்டு வழக்குகள் உட்பட 9 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-முனியசாமி, ஓட்டப்பிடாரம்.