ஓட்டப்பிடாரம் காவல்துறைக்கு டிஜிபி சைலேந்திரபாபு பாராட்டு!!!.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரத்தில் ஜூன் 6-ம் தேதி அதிகாலை நடை பயிற்சி சென்ற இருவரிடம் தங்க நகைகளை மோட்டார் சைக்கிள் வந்த மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி வழிப்பறி செய்தனர்.
இந்த சம்பவம் தூத்துக்குடி மாவட்டத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. பணத்தை இழந்த இருவரிடம் இருந்து கிடைத்த வாக்குமூலம் மற்றும் ஓட்டப்பிடாரம் திருநெல்வேலி சாலையில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஓட்டப்பிடாரம் மற்றும் புளியம்பட்டி காவல்துறையினர் சோதனை செய்தனர்.
சம்பவம் நடந்து பத்து மணி நேரத்தில் வழிப்பறி நபர்களை அடையாளம் கண்டு கைது செய்தனர். தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் அவர்கள் ஓட்டப்பிடாரம் காவல்துறைக்கு பாராட்டுகளை தெரிவித்து இருந்தார். இந்த நிலையில் நேற்று டிஜிபி சைலேந்திரபாபு அவர்கள் ஓட்டப்பிடாரம் இன்ஸ்பெக்டர் முத்துராமன் , சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜா, தனிப்பிரிவு மகேந்திரன் பாலமுருகன், மற்றும் புளியம்பட்டி காவல் துறையினருக்கு நேரில் அழைத்து வாழ்த்தி பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
ஒட்டப்பிடாரம் நிருபர்
-முனியசாமி.