கோவை மாவட்டம் பொள்ளாச்சி சார் ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயிகள் முறையீட்டுகுழு கூட்டம் பொள்ளாச்சி சார் ஆட்சியர் பிரியங்கா தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில், ஆனைமலை சரளைபதி பகுதியில் விவசாயிகளை அச்சுறுத்தும் கும்கியானையை பிடித்து வனப்பகுதியில் விட வேண்டும். பொள்ளாச்சி மின்கரை சாலை
அம்பராம்பாளையம் ஆற்றில் கழிவு நீர் கலப்பதை தடுக்க வேண்டும்.
கொப்பரை தேங்காய் கொள்முதல் அதிகரிக்க வேண்டும். பொள்ளாச்சி பகுதி வழியாக கனிம வளங்களை கேரளாவுக்கு கடத்திச் செல்வதை தடுத்து நிறுத்த வேண்டும். ஆழியாறு ஆற்றில் தண்ணீர் திருடும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் சார் ஆட்சியரிடம் விவசாயிகள் முறையிட்டனர். விவசாயிகளின் கருத்தை கேட்ட சார் ஆட்சியர் பிரியங்கா உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.
-M.சுரேஷ்குமார்.