தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் சிவந்திபட்டி ஊராட்சி கரிசல்குளம் கிராமத்தில் பாராளுமன்றத் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து தலா ரூ. 6 லட்சம் மதிப்பீட்டில் பயணியர் நிழற்குடைகளை அமைக்க கனிமொழி எம்.பி அடிக்கல் நாட்டினார்.
பின்னர் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவில் கனிமொழி எம்பி பேசியது விரைவில் மகளிர் உரிமைத்தொகை ஆயிரம் ரூபாய் செப்டம்பர் 15ஆம் தேதி வழங்கப்படும் என அறிவித்தார். இந்தப் பயணியர் நிழற்குடை கட்டி முடித்த பின் திறப்பு விழாவிற்கு நானே வருவேன் என்று பேசினார்.
விழாவில் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டார். கூடுதல் ஆட்சியர் தாக்கரே சுபம் ஞானதேவராவ், , மாவட்ட வருவாய் அலுவலர். அஜய் சீனிவாசன், தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி, கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் கருணாநிதி ஒன்றியக் கழகச் செயலாளர்கள் முருகேசன் இராதாகிருஷ்ணன் , கிளை செயலாளர் ஜெகதீஸ்வரி , துணை செயலாளர் உத்தமன், பொருளாளர் தங்கராஜ் , உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.