கோவை மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியில் சார் பதிவாளர் அலுவலகம் அமைந்துள்ளது இங்கு தினமும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பத்திர பதிவு சம்பந்தமான வேலைக்காக வந்து செல்வார்கள்.
மேலும் பத்திரப்பதிவு அலுவலகத்தில் பணிபுரியும் அதிகாரிகள் முதல் பணியாளர்கள் வரை வந்து செல்லக்கூடிய மிக முக்கியமான பகுதியாகும் இந்த சார்பதிவாளர் அலுவலகத்துக்கு முன்னால் உள்ள கழிவுநீர் கால்வாயில் குப்பை கழிவுகளும் பிளாஸ்டிக் கழிவுப் பொருட்களும் தேங்கி மிகுந்த துர்நாற்றம் வீசும் நிலையில் உள்ளது.
நோய் தொற்று ஏற்படும் வகையில் மிகவும் சுகாதார சீர்கேடாக உள்ள இந்த கழிவுநீர் கால்வாயை உடனடியாக சுத்தம் செய்து துர்நாற்றம் வீசாத நிலையிலும் நோய் தொற்று ஏற்படாத வகையிலும் முறையாக பராமரிக்க வேண்டும் என்பதே சார் பதிவாளர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்கள் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்களின் வேண்டுகோளாக உள்ளது.
நாளைய வரலாறு செய்திக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்
-சி.ராஜேந்திரன்.