தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம், சந்திரகிரி ஊராட்சி, கீழச்செய்தி கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி நிதி மேம்பாட்டுக்கு கீழ் ரூ.8-லட்சம் மதிப்பீட்டில் புதிய நியாய விலைக்கடை கட்டுவதற்கான பணியை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்கண்டேயன் அவர்கள் அடிக்கல் நாட்டில் துவக்கி வைத்தார்கள்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
பின்னர் பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து மனுக்களை பெற்றார். பெறப்பட்ட மனுக்கள் மீதான குடிநீர் வசதி ,சாலை வசதிகள் மற்றும் போக்குவரத்து சரிசெய்து தருவதாக உறுதி அளித்தார்.
இந்த அடிக்கல் நாட்டு விழாவில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சிவபாலன், ராம்ராஜ் மற்றும் ஓட்டப்பிடாரம் பெருந்தலைவர் எல்.ரமேஷ் அவர்கள் ஓட்டப்பிடாரம் ஒன்றிய துணைப் பெருந்தலைவரும்,ஒன்றிய செயலாளருமான காசிவிஸ்வநாதன் அவர்கள், ஒன்றிய கவுன்சிலர் சுப்புலட்சுமி, விளாத்திகுளம் மேற்கு ஒன்றிய செயலாளர் அன்புராஜன், சந்திரகிரி ஊராட்சி மன்ற தலைவர் சந்தனராஜ்,
துணை தலைவர் ஆனந்த், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பா.புவிராஜ், சத்துணவுத் அங்கன்வாடி சங்கம் ஓய்வு கட்டப்பொம்மன், சமூக ஆர்வலரும் தொழில் அதிபர் மாரிதாஸ், கிளை செயலாளர் அழகுராஜ் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கந்தசாமி, சி.பி.எம்.கிளை செயலாளர் மொட்டையசாமி உட்பட கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.