போதைப் பொருட்களை பயன்படுத்துவதால் உலகெங்கும் வன்முறைகளும் குற்றங்களும் அதிகமாகி வருகின்றன. இதனால் உடல் நலக் கோளாறாலும், மன நோயாலும் பலர் பாதிக்கப்படுகின்றனர். மனித சமூகத்திற்கு போதைப் பொருளால் ஏற்படும் பாதிப்பை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவே 1987ஆம் ஆண்டு முதல் ஜூன் 26ஆம் தேதியன்று உலகம் முழுவதும் சர்வதேச போதைப் பொருள் ஒழிப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது.
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரியில் மதுவிலக்கு அமலாக்கத்துறை சார்பில் போதைப்பொருள்கள் சமூகத்தில் உண்டாக்கும் கேடுகள் குறித்து பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்கள் இடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பேரணி நடத்தப்பட்டது. சிங்கம்புணரி பேருந்து நிலையத்தில் துவங்கிய இந்த விழிப்புணர்வு பேரணியில் பள்ளி, கல்லூரி மாணவ மாணவியர்கள் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு, சிங்கம்புணரியின் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து பொதுமக்களின் கவனத்தை ஈர்த்தனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
பேரணியில் மாணவ மாணவிகள் போதை பொருட்கள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை ஏந்திச்சென்றனர். சிங்கம்புணரி வருவாய் வட்டாட்சியர் சாந்தி இந்த விழிப்புணர்வுப் பேரணியை துவங்கி வைத்து, பள்ளி கல்லூரி மாணவர்களிடையே பேசும்போது போதை பொருளினால் ஏற்படும் தீமைகள், சமூக சீர்கேடுகள் குறித்து எடுத்துரைத்து விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.
மாணவர்கள் போதைப் பழக்கத்திற்கு அடிமையாக கூடாது எனவும் நம்மை சுற்றி இருக்கிற யாரையும் போதைப் பழக்கத்திற்கு அடிமையாக விடக்கூடாது எனவும் அறிவுறுத்தினார். பேரணியின் துவக்கத்தில் மாணவ, மாணவியர் போதை ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். பேரணியில் சிங்கம்புணரி காவல் நிலைய சார்பு ஆய்வாளர் ராஜவேல் தலைமையிலான காவல்துறையினர் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
-ராயல் ஹமீது, சிங்கம்புணரி.