சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில் குடமுழுக்கு விழா!
ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு!
சிவகங்கை தேவஸ்தானத்துக்கு சொந்தமான சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோவில், சுமார் 600 ஆண்டுகள் பழமையானது.
இக்கோயிலில் கடந்த 1973, 2001 ஆகிய ஆண்டுகளில் குடமுழுக்கு நடைபெற்ற நிலையில் 22 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் திருப்பணி செய்து குடமுழுக்கு நடத்த முடிவுசெய்யப்பட்டது.
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராம.அருணகிரி தலைமையில் திருப்பணிக்குழு அமைக்கப்பட்டது. கோவில் முழுவதும் புனரமைக்கப்பட்டு, அனைத்து கோபுரங்களுக்கும் தங்க முலாம் பூசப்பட்ட தகடுகள் பதிக்கப்பட்டு தங்க கலசங்கள் பொருத்தப்பட்டது. கோவில் உள்ளேயும் வெளியேயும் உள்ள புரவிகள் சீரமைக்கப்பட்டு வண்ணம் பூசப்பட்டன.
திருப்பணிகள் நிறைவுற்ற நிலையில் இன்று குடமுழுக்கு விழா நடத்தப்பட்டது. இதற்காக 4000 சதுர அடியில் 41 குண்டங்களுடன் பிரம்மாண்டமான யாகசாலை அமைக்கப்பட்டது.
இன்று காலை சரியாக 10:25 மணிக்கு ராஜகோபுரம், மூலஸ்தான விமானம் அனைத்து உள்ளிட்ட அனைத்து கோபுரங்களுக்கும் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது. இந்த குடமுழுக்கு நிகழ்வில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சேவுகப்பெருமாள் அய்யனாரை வணங்கிச் சென்றனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த பிரம்மாண்டமான குடமுழுக்கு நிகழ்விற்கு சிவகங்கை சமஸ்தான ராணி மேதகு டி.எஸ்.கே.மதுராந்தகி நாச்சியார் தலைமை ஏற்றார். நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றிய அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ப.சிதம்பரம், தவத்திரு பொன்னம்பல அடிகளார், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராம.அருணகிரி, சிங்கம்புணரி பேரூராட்சித் தலைவர் அம்பலமுத்து, துணைத்தலைவர் இந்தியன் செந்தில், சிவகங்கை மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் பொன்.மணி பாஸ்கர் மற்றும் சுற்று வட்டார கிராம மக்கள் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
திருப்பத்தூர் கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் (பொறுப்பு) கார்த்திகேயன் தலைமையிலான நூற்றுக்கணக்கான காவல்துறையினர் பாதுகாப்பு ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.
– சிவகங்கை மாவட்ட தலைமை நிருபர்
பாரூக்.