தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகில் ஜெக வீரபாண்டியபுரம் (சந்திரகிரி விலக்கு) பேருந்து நிறுத்தத்தில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள் நின்று செல்ல மற்றும் கீழச்செய்த்தலை கிராம பள்ளி மாணவர்கள் நலன் கருதி காலை மற்றும் மாலை வேலைகளில் பேருந்துகள் இயக்க கிராம மக்கள் சார்பில் இன்று 28.06.2023 காலை 10 மணி அளவில் ஆர்ப்பாட்டம் அறிவித்து இருந்தார்கள்.
இதனை அறிந்த அரசு அதிகாரிகள் ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் தலைமையில் சமாதான கூட்டம் நேற்று 27.06.2023 மாலை 5 மணி அளவில் நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் ஜெகவீரபாண்டியபுரம் வழியாக தூத்துக்குடியில் இருந்து கோவில்பட்டி மற்றும் கோவில்பட்டியில் இருந்து தூத்துக்குடி செல்லும் அரசு பேருந்துகளில் சாதாரண பேருந்து என ஸ்டிக்கர் ஒட்ட வேண்டும், இரு மார்க்கங்களில் இருந்து புறப்படும் பேருந்துகளின் நேர அட்டவணைகளை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என கோரிக்கையை தூத்துக்குடி புறநகர் கிளை மேலாளர் அவர்கள் ஏற்றுக்கொண்டனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கீழச்செய்த்தலை கிராமத்திற்கு காலை மற்றும் மாலை வேலைகளில் அரசு பேருந்து இயக்க கோரிக்கை வைக்கப்பட்டது அதுவும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. மேலும் ஜெக வீரபாண்டியபுரம் வழியாக செல்லும் தனியார் பேருந்துகள் நின்று செல்ல கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது . கிராம மக்களின் கோரிக்கைகள் ஏற்கப்பட்டதால் சாலை மறியல் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
இந்த சமாதான கூட்டத்தில் கலந்து கொண்ட அரசு அதிகாரிகள் , உதவி ஆய்வாளர் எப்போதும் வென்றான், பொது மேலாளர் தூத்துக்குடி புறநகர் கிளை, துணை மண்டல வட்டாட்சியர் ஓட்டப்பிடாரம், வருவாய் ஆய்வாளர் எப்போதும் வென்றான் கிராம நிர்வாக அலுவலர் எப்போதும் வென்றான்.
கூட்டத்தில் கலந்து கொண்ட கிராம மக்கள் :
சுப்புலட்சுமி ஒன்றிய கவுன்சிலர், சண்முகராஜ் செயலாளர் ஓட்டப்பிடாரம் சி.பி.ஐ., புவிராஜ் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கீழச்செய்தலை, சி.பி.ஐ.(எம்) சுரேஷ் ஊராட்சி மன்ற தலைவர் ஜெக வீரபாண்டியபுரம், காளிதாஸ் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் கீழச்செய்த்தலை, ஜெயக்குமார் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் மேலச்செய்தலை, தனலட்சுமி மாடத்தி ஜெகவீரபாண்டியபுரம், செண்பகவல்லி ராஜி மேலச்செய்தலை , வளர்மதி ஆனந்தி கீழச்செய்த்தலை ஆகியோர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.