தூத்துக்குடி மாவட்டம் புதூர்பாண்டியாபுரம் அருகே டோல்கேட்டில் நிலக்கரி ஏற்றி வந்த டிப்பர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. தூத்துக்குடி துறைமுகத்தில் இருந்து மேலஅரசடியில் உள்ள அனல்மின் நிலையத்திற்கு நிலக்கரி ஏற்றி வந்த தூத்துக்குடியை சேர்ந்த வெங்கட்ராம் என்பருக்கு சொந்தமான டிப்பர் லாரியை, மணிகண்டன் என்பவர் ஓட்டி சென்றார்.
அப்போது, தூத்துக்குடி-மதுரை ரோட்டில் உள்ள புதூர்பாண்டியாபுரம் டோல்கேட்டில் வந்து கொண்டிருந்த போது, அதிவேகமாக வாகனத்தை இயக்கி நின்று கொண்டிருந்த காரை இடித்து தள்ளியுள்ளார். அப்போது லாரி நிலை தடுமாறி டோல்கேட்டில் நிலக்கரியோடு கவிழ்ந்தது. அதிர்ஷ்டவசமாக இந்த சம்பவத்தில் யாருக்கும் உயிரிழப்பு ஏற்படவில்லை.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
பின்னர் சிசிடிவி கேமராக்கள் சோதனை செய்து பார்த்து போது லாரி நிலை தடுமாறி காரின் மேல் மோதியது கண்டறியப்பட்டது, லாரி டிரைவர் மணிகண்டன் தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார்.
இது குறித்து புதியம்முத்தூர் உதவி ஆய்வாளர் பாலன் சம்பவ இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்து காரணமாக தூத்துக்குடியில் இருந்து மதுரை செல்லும் சுங்கச்சாவடியில் இரண்டு கவுண்டர்கள் அடைக்கப்பட்டு இரண்டு சுங்கச்சாவடிகள் செயல்படுகின்றன மேலும் கவிழ்ந்த லாரியை அப்புறப்படுத்தும் பணியில் லாரி நிறுவன ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-முனியசாமி, ஓட்டப்பிடாரம்.