கோவையில் நடிகர் விஜய் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு கோவை மாவட்ட விஜய் மக்கள் இயக்கம் தொண்டரணி சார்பாக கோவில்களில் சிறப்பு பூஜை மற்றும் நலத்திட்ட உதவிகளுடன் இலவசமாக மாஸ்டர் பட கண்காட்சி திரையிடப்பட்டது.
தளபதி என ரசிகர்களால் அன்பாக அழைக்கப்படும் நடிகர் விஜய்யின் பிறந்த நாளை, வழக்கத்தை விட இந்த ஆண்டு சற்று கூடுதலாக விஜய் மக்கள் இயக்கத்தினர் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் கோவை மாவட்ட விஜய் மக்கள் இயக்கத்தின் தொண்டணியினர் காலை முதல் கோவில்களில் சிறப்பு பூஜைகள், நலத்திட்ட உதவிகளுடன் சற்று வித்தியாசமாக கொண்டாடி உள்ளனர்.
அதன் படி கோவை போத்தனூர் அருகில் உள்ள அரசன் திரையங்கில் விஜய் நடித்து,மாபெரும் வெற்றி பெற்ற மாஸ்டர் திரைப்படத்தை சிறப்பு காட்சியாக திரையிட்டு மாற்றுத்திறனாளிகள், மாணவ, மாணவிகளுக்கு இலவசமாக டிக்கெட் வழங்கி கொண்டாடினர். மாவட்ட தொண்டரணி தலைவர் கோவை விக்கி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், ,அண்மையில் விஜய் மேடையை விட்டு கீழே இறங்கி கவுரபடுத்திய மாணவி ஆர்த்தி கலந்து கொண்டார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அவருக்கு, கோவை மாவட்ட விஜய் மக்கள் இயக்க தொண்டரணியின் மாவட்ட தலைவர் கோவை விக்கி பதினைந்தாயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கி கவுரபடுத்தினார். இதே போல படம் மாஸ்டர் சிறப்பு காட்சியை பார்க்க வந்த அனைவருக்கும் இனிப்புகள் வழங்கி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய விஜய் மக்கள் இயக்க தொண்டரணியினர் தியேட்டர் ஊழயர்களுக்கு புத்தாடைகள் வழங்கினர்.
இது குறித்து மாவட்ட தொண்டரணி தலைவர் விக்கி கூறுகையில்,காலைமுதலே ஈச்சனாரி கோவிலில் சிறப்பு பூஜையுடன் தளபதி விஜய் பெயரில் தேர் இழுத்து வழிபட்டதாகவும்,அதனை தொடர்ந்து அன்னதானம், நலத்திட்ட உதவிகளை வழங்கியதாக கூறிய அவர், இந்நிகழ்ச்சியில் எங்களது தளபதி கவுரபடுத்திய மாற்றுத்திறனாளி மாணவி ஆர்த்தி எங்களது நிகழ்ச்சியில் கலந்து கொண்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளதாக தெரிவித்தார்.
விஜய் மக்கள் இயக்கத்தின் தேசிய பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்து, அறிவுறுத்தலின் பேரில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில்,சிறப்பு அழைப்பாளர்களாக கோவை மாவட்ட தலைமை இளைஞரணி தலைவர் யுவராஜ், கோவை மாவட்ட மாணவரணி தலைவர் பாபு ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில், கோவை மாவட்ட தலைமை தொண்டரணி நிர்வாகிகள் அருண் பாண்டியன், கிரிஷ், அருண் ஈஸ்வர், ரஞ்சித், உமாபதி, பரத், வினோத், பிரவீன், பவின், தமிழரசன், வருன், லோகநாதன், இளைஞர் அணி நிர்வாகிகள், மகேஷ், தினேஷ், நந்தகுமார், சமத்துவபுரம் ரவி , மதுக்கரை வினோத், நாகராஜ், குறிச்சி அமான், போத்தனூர் சமீர், பாலாஜி, கிணத்துக்கடவு சபரி, சேகர், கள்ளபுரம், பழனிச்சாமி, ராஜ்குமார், லவ்லி விஜய், அரவிந்த், வினித் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
-சீனி, போத்தனூர்.