பாரதியார் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் (Ph.D.,) மற்றும் ஆய்வியல் நிறைஞர் பட்டம் (M.Phil.,) சேர்க்கைக்கான பொது நுழைவுத் தேர்வு 2023 (CET-2023) வரும் ஞாயிறு 11/6/2023 அன்று நடைபெற உள்ளது.
பாரதியார் பல்கலைக்கழக துறைகள் மற்றும் இணைவு பெற்ற கல்லூரிகளில் ஆராய்ச்சி பட்டம்(P.hd., M.Phil.,) பயிலுவதற்கான பொது நுழைவுத் தேர்வு நடைபெற உள்ளது.51 பாடங்களில் நடைபெற உள்ள இந்த நுழைவுத் தேர்வுக்கு 4000 விண்ணப்பங்கள் பெறப்பட்ட நிலையில் 2199 விண்ணப்பங்கள் தகுதியானவையாக இனங்காணப் பட்டுள்ளன. தகுதியான விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும் தேர்வுக்கான நுழைவுச்சீட்டை பாரதியார் பல்கலைக்கழக இணைய பக்கத்தில் தரவிறக்கம் செய்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
கோயம்புத்தூர், ஊட்டி, ஈரோடு, திருப்பூர், பொள்ளாச்சி ஆகிய ஐந்து இடங்களில் நுழைவுத் தேர்வு நடைபெறுகிறது. தேர்வு நடைபெறும் மையங்கள் கோவை மாவட்டத்தில் பிஷப் அப்பாசாமி கல்லூரி, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி, இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரி ,ஆகிய மூன்று கல்லூரிகளிலும் நீலகிரி மாவட்டத்தில் அரசு கலைக் கல்லூரி , ஈரோடு மாவட்டத்தில் வேளாளர் மகளிர் கலை கல்லூரி , திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர் குமரன் மகளிர் கல்லூரி மற்றும் பொள்ளாச்சியில் என் ஜி எம் கல்லூரி ஆகிய ஏழு கல்லூரிகளில் தேர்வு மையம் செயல்பட உள்ளன தேர்வு 11-06-2023 அன்று சரியாக காலை 11 மணிக்கு தொடங்கும் பிற்பகல் 12:30 மணிக்கு நிறைவடையும் . தேர்வாளர்கள் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் தேர்வு நுழைவுச்சீட்டில் கொடுக்கப்பட்டுள்ளது.
நுழைவுத் தேர்வுக்கான பணிகளை பொது நுழைவுத் தேர்வு 2023 (CET-2023) ஒருங்கிணைப்பாளரும் தாவரவியல் துணைத் தலைவருமான பேரா. முனைவர் த.பரிமேலழகன் அவர்கள் தலைமையிலான குழுவினர் சிறப்பாக செய்து வருகின்றனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-சி.ராஜேந்திரன்.