பாரதியார் பல்கலையின் கீழ், ஏழை எளிய மாணவர்களுக்கு பயன்படும் வகையில் உருவாக்கப்பட்ட, இலவச கல்வித்திட்டம், தற்போதைய அதிகாரிகளின் புரிதல் இன்மையால், தகுதியான மாணவர்களின் வாய்ப்புகள் பறிபோகின்றன. 2006ம் ஆண்டு முன்னாள் துணைவேந்தர் திருவாசகம் சார்பில், பல்கலையின் கட்டுப்பாட்டில் உள்ள கல்லுாரிகளில், இலவச கல்வித்திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதன் வாயிலாக, 400க்கும் மேற்பட்டவர்களுக்கு இலவச கல்வி வாய்ப்பு கிடைத்தது. சேர்க்கையில் பல்வேறு குளறுபடி நடப்பதாக கூறி, 2017ல் இத்திட்டம் கைவிடப்பட்டது.
2021ல் முன்னாள் துணைவேந்தர் காளிராஜ் சிறப்பு குழு அமைத்து, இத்திட்டத்தை ஆய்வு செய்தார். அதன் பின், 2022-23ம் ஆண்டில் ஒரு கல்லுாரிக்கு, 15 மாணவர்கள் பயன் பெறும் வகையில் திட்டத்தை விரிவுபடுத்தி, மீண்டும் அமல்படுத்தினார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தாமதமாக அமல்படுத்தியதால், சில மாணவர்கள் மட்டுமே பயன்பெற்றனர். ஆனால், நடப்பு கல்வியாண்டில் மிகவும் தாமதமாக, கல்லுாரிகளுக்கு இத்திட்டத்தை செயல்படுத்த சர்குலர் அனுப்பப்பட்டது. கடந்த காலங்களில் முறைகேடு நடந்ததாக கூறப்படும் அதே விண்ணப்ப செயல்பாடுகளை, தற்போதும் பின்பற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பல்கலை பதிவாளர் (பொறுப்பு) முருகவேலிடம் கேட்டபோது, ”அந்தந்த கல்லுாரிகளில் சேர்க்கை செயல்பாடுகள் முடிந்த பின், அதில், தகுதியான மாணவர்களை தேர்வு செய்து கல்லுாரிகள் ஒப்புதலுக்கு அனுப்பும்.
பல்கலை சிறப்பு குழு விண்ணப்பங்களை ஆய்வு செய்து, ஒப்புதல் அளிக்கும். ஒரு துறைக்கு அதிக பட்சம் 3 பேர் சேர்த்துக்கொள்ளலாம்; கல்லுாரிக்கு 15 பேர் சேர்க்கப்படுவார்கள், ” என்றார். பல்கலை சிண்டிகேட் உறுப்பினர் ஒருவர் கூறுகையில், ‘இத்திட்டத்தில் சுமார், 1500 ஏழை மாணவர்கள் பயன்பெறுவார்கள். ஆனால், தற்போதைய பொறுப்பு அதிகாரிகளுக்கு போதிய புரிதல் இல்லை. இதனால், தகுதியான மாணவர்களின் வாய்ப்பு பறிக்கப்படுகிறது’ என்றார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.