கோவை மாவட்டம் சூலூர் கண்ணம்பாளையம் பகுதியில் எண்ணற்ற தனியார் கல்லுரிகள் செயல்பட்டு வருகிறது. இங்கு திருப்பூர், பல்லடம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் அதிகளவில் படித்து வருகின்றனர்.
இது மட்டும் அல்லாமல் தனியார் ஊழியர்கள் மற்றும் கூலித்தொழிலாளிகள் காலை நேரத்தில் பஸ்கள் மூலம் வேலைக்கு சென்று, மாலை நேரத்தில் வீடு திரும்புகின்றனர். இதனால் காலை, மாலை நேரங்களில் கோவை மாநகர பஸ் நிறுத்தங்களில் கூட்டம் அலைமோதும். கூட்டம் எவ்வளவு தான் அதிகமாக காணப்பட்டாலும் அரசு பஸ்கள் மிகவும் குறைந்த அளவு இயக்கப்படுகிறது.
இதனால் அனைத்து பஸ்களிலுமே கூட்டம் அதிகமாக இருக்கும். குறைந்த அளவு அரசு பஸ்கள் இயக்கப்படுவதால் மாணவர்கள் அனைவரும் தனியார் பஸ்களிலேயே பெரும்பாலும் பயணிக்கின்றனர். ஒருசில வழித்தடங்களில் தனியார் பஸ்களும் குறைந்த அளவே இயங்கி வருகிறது. எனவே பஸ்களில் கூட்டத்தை தவிர்க்க முடிவில்லை. இதனால் மாணவர்கள் வேறுவழியின்றி படிக்கட்டுகளில் ஆபத்தான முறையில் பயணம் செல்ல வேண்டி உள்ளது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்நிலையில் கோவையில் இருந்து திருப்பூர் நோக்கி சென்ற ஒரு தனி யார் பஸ்ஸில் கல்லூரி மாணவர்கள் கடைசி படிக்கட்டில் ஒற்றைக்காலை படியில் வைத்த படி பயணம் செய்துள்ளனர். கரணம் தப்பினால் மரணம் என்ற பழமொழிக்கு ஏற்பவே அவர்களின் பயணமானது இருந்தது. அரசு மற்றும் தனியார் பஸ்களில் மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியபடி செல்வதால், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் ஒரு அச்சத்துடனேயே செல்கின்றனர்.
எனவே போக்குவரத்து போலீசார் மற்றும் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் இந்த விஷயத்தில் உடனடியாக தலையிட்டு, பள்ளி-கல்லூரி மாணவர்களின் ஆபத்தான பஸ் படிக்கட்டு பயணத்துக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும். மேலும் கூடுதல் பஸ்களை இயக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்கள், சமூக ஆர்வலர்களின் வேண்டுகோளாக உள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.