நேற்று இரவு சுமார் 8 மணி அளவில் பொதுமக்கள் சாலை மறியல் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. போத்தனூர் 99 வது வார்டு 20 பிளாக் பகுதியில் திடீரென பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சாலை விரிவாக்க பணிக்காக தங்கள் குடியிருக்கும் வீடுகளை அதிகாரிகள் இடித்து தள்ளியதால் மக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகினர் 20 பிளாக் பகுதியில் முப்பது ஆண்டுகளாக குடியிருந்து வரும் பொதுமக்கள்.
அந்தப் பகுதியில் வசிக்கும் மக்களுக்கு அதிகாரிகள் ஆறு மாதத்துக்கு முன்பே காலி செய்ய முறையான அறிவிப்பை கொடுத்துள்ளனர் இருப்பினும் அந்த பகுதி மக்கள் காலி செய்யாத காரணத்தால் நேற்றைய தினம் அந்த குடியிருப்பு பகுதியில் சாலை விரிவாக்க பணிக்காக அகற்றப்பட்டது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
திடீரென தங்களது பகுதி வீடுகள் இடிக்கப்பட்டதால் திக்கு தெரியாமல் எங்கு செல்வது என்று புரியாமல் அலைமோதிய பொதுமக்கள் இரவு நேரமானதால் தங்கும் வசதி கூட இல்லாமல் தவித்த நிலையில் மாற்று இடம் தருமாறு அரசுக்கு கோரிக்கை விடுத்ததுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் அந்தப் பகுதி பரபரப்படைந்தது உடனடியாக அங்கு வந்துள்ள காவல்துறை அதிகாரிகள் கூடியிருந்த மக்களை அழைத்து பேச்சு வார்த்தை நடத்தி அனுப்பி வைத்ததால் சாலை மறியல் கைவிடப்பட்டது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
தலைமை நிருபர்,
-ஈசா.