மந்திதோப்பு கிராமத்தில் நிலம் வாங்கி தருவதாக ரூபாய் 30 லட்சம் மோசடி!!!
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு தாலுகா முடுக்கலாங்குளம் கிராமத்தில் குப்புசாமி மகன் மாரியப்பன் என்பவர் மந்தித்தோப்பு கிராமத்தில் இடம் வாங்கி தருவதாக அதே கிராமத்தைச் சார்ந்த பத்து நபரிடம் ரூபாய் 30 லட்சம் பெற்றுள்ளார்.
கடந்த 23.04.2023 அன்று முடுக்கலாங்குளம் கிராமத்தைச் சார்ந்த முண்டசாமி , காசிராஜன் , சண்முகசாமி சித்திரவேல் , அழகர்சாமி, முத்துராஜ், பாலமுருகன், பூமாரியப்பன் சின்னத்துரை, ஜெயசீலன் ஆகிய பத்து நபர்களிடம் ரொக்க பணமாக ஒவ்வொரு நபரிடமிருந்து தல 3 லட்சம் விதம் 30 லட்சம் முண்டசாமி வீட்டின் முன்பு வைத்து வாங்கியுள்ளார்.
இரண்டு மாதம் கழித்து மந்திதோப்பில் இடம் வாங்கி தருவதாக சொன்னீர்கள் இன்னும் இடம் வரவில்லை ஆகையால் பணத்தை திருப்பி தாருங்கள் என கேட்டுள்ளார்கள் . பணத்தை திருப்பித் தர முடியாது இடமும் இல்லை என பதிலளித்துள்ளார். இவர் தலையாரி (கிராம உதவியாளர்) பணிபுரிந்து வருகிறார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதனால் மனதளவில் பாதிக்கப்பட்டுள்ள சண்முகச்சாமி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களிடம் புகார் மனு அளித்துள்ளார் . மற்றும் மகாலிங்கம் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அவர்களுக்கு, தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு , கோவில்பட்டி கோட்டாட்சியர் அவர்களுக்கு புகார் மனு கொடுத்துள்ளார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக
ஒட்டப்பிடாரம் நிருபர்
-முனியசாமி.