வால்பாறை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், வீடு மற்றும் கடைகளில் வெளியாகும் குப்பை உள்ளிட்ட கழிவுகளை, துாய்மை பணியாளர்கள் சேகரித்து, குப்பைக்கிடங்கிற்கு கொண்டு செல்கின்றனர். இந்நிலையில், புதுமார்க்கெட் பகுதியில், காய்கறி மற்றும் பழக்கழிவுகள் திறந்தவெளியில் கொட்டப்படுகின்றன. அவற்றை கால்நடைகளும் உணவாக உட்கொள்கின்றன.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மேலும் கெட்டுப்போன காய்கறி பழங்களின் கழிவுகள் திறந்தவெளியில் கொட்டப்படுகின்றன இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு, தொற்றுநோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், மீன், இறைச்சிக்கழிவுகளும் திறந்தவெளியில் வீசப்படுவதால், நகரில் சுகாதாரம் பாதிக்கப்படுவதுடன், சிறுத்தை நடமாட்டம் அதிகரித்துள்ளது.
புதுமார்க்கெட் பகுதி வியபாரிகள் கழிவுகளை திறந்தவெளியில் கொட்டுவதை தவிர்க்க, நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் வேண்டுகோள் விடுக்கிறார்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
கோவை மாவட்ட தலைமை நிருபர்,
-சி.ராஜேந்திரன்.