கோவை மாவட்டம் வால்பாறைக்கு தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து இயற்கை அழகை கண்டு ரசித்து செல்கின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலாப் பயணிகள் நகராட்சிக்கு உட்பட்ட வால்பாறை பகுதியில் உள்ள படகு இல்லம் சென்றபோது, படகு இல்லம் செயல்படாமல் இருந்துள்ளது.
இதனால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர். வால்பாறை கோடை விழா முன்னிட்டு அமைச்சர் செந்தில் பாலாஜி வருகை தந்த போது, நாகரட்சி படகு இல்லம் திறந்து வைக்கப்பட்டது. இன்றுவரை படகு இல்லம் பயன்பாட்டுக்கு வராமல் உள்ளது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றத்துடன் செல்லும் நிலை ஏற்பட்ட உள்ளது.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-சி.ராஜேந்திரன்.