வால்பாறை அடுத்துள்ள முருகாலி கல்யாண பந்தலில் வசிக்கும் மெக்கானிக் முருகன் என்பவரும் அவருடைய மகனும் வால்பாறை பெரியார் நகர் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருக்கும் பொழுது, எதிரே வந்த டிராக்டரின் மீது நேருக்கு நேர் மோதியதில் இருவரும் படுகாயம் அடைந்தனர்.
இருவரையும் மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
நாளைய வரலாறு செய்திக்காக,
-சி.ராஜேந்திரன்.