வெள்ளலூர் குப்பைக் கிடங்கில் இருந்து நாள்தோறும் 600 டன் குப்பை வரை பயோ மைனிங் மூலம் அழிக்கப்பட்டு வருவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
கோவை மாநகராட்சியில் 100 வார்டுகள் உள்ளன. இங்கிருந்து நாள் ஒன்றுக்கு 800 டன் முதல் 1000 டன் வரை குப்பைகள் சேகரமாகிறது. அவை அனைத்தும் வெள்ளலூரில் 650 ஏக்கர் பரப்பளவில் உள்ள குப்பைக்கிடங்கில் கொட்டப்படுகிறது.
இதன் ஒரு பகுதியில் 60 ஏக்கர் பரப்பளவில் 9 லட்சம் மெட்ரிக் டன் அளவுக்கு தரம் பிரிக்கப்படாத குப்பை தேக்கம் அடைந்துள்ளது. இந்த குப்பையை பயோ மைனிங் முறையில் அழிக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்தது. இதற்காக ரூ.60 கோடியில் திட்டம் தயாரிக்கப்பட்டு, தனியார் அமைப்பு மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இதனால் தேங்கியுள்ள குப்பை அளவு குறைந்து வருகிறது. மேலும் வெள்ளலூர் குப்பைக்கிடங்கிற்கு செல்லும் குப்பைகளை குறைக்கும் வகையில் மாநகரில் 33 இடங்களில் நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் கூடங்கள் செயல்பட்டு வருகிறது. குப்பைகள் தரம் பிரிக்கப்பட்டு மக்கும் குப்பைகளில் இருந்து மண்புழு உரம் தயாரிக்கப்படுகிறது.
-அருண்குமார், கிணத்துக்கடவு.