கோவை குனியமுத்தூரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் (எஸ்கேஏஎஸ்சி) 19வது பட்டமளிப்பு விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. அமெரிக்காவின் மிசோரி மாகாணத்தில் உள்ள கன்சாஸ் சிட்டி அவிலா பல்கலைக்கழகத்தின் தலைவர் டாக்டர் ஜேம்ஸ் சி பர்க்கி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பட்டச் சான்றிதழ்கள் வழங்கி பட்டமளிப்பு தின உரையை ஆற்றினார்.
2,161 இளங்கலை மற்றும் 337 முதுகலை பட்டதாரிகள் உட்பட 2,498 பட்டதாரிகளுக்கு பட்ட படிப்பு சான்றிதழ்கள் இந்த விழாவில் வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் 77 தரவரிசைப் பெற்றவர்களும் கௌரவிக்கப்பட்டனர்.
இதில் சிறப்பு விருந்தினர் பேசுகையில் பட்டதாரிகள் இந்திய நாட்டின் கலாச்சாரத்தை நன்கு தெரிந்து அதை தங்களின் வாழ்க்கை மேம்பட பயன்படுத்துங்கள். இந்திய வளர்ச்சியின் வரலாற்றை நன்கு தெரிந்துகொண்டு நாடு முன்னேற உங்கள் கடமையை ஆற்றுங்கள். இந்தியா உலகில் கலாசாரத்திற்கு முதன்மை நாடாக உள்ளது.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அமெரிக்காவில் மட்டும் இன்றி உலக நாடுகளில் இந்தியர்களின் கலாச்சாரம் மிகவும் போற்றப்பட்டு வருகிறது. அதேபோல் இந்தியர்கள் உலக நாடுகளில் பல்வேறு அரிய சாதனைகளை படைத்து வருவதுடன், உலகின் பல்வேறு நிறுவனங்களை தலைமையேற்று வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர். மேலும் உலக அளவில் பல்வேறு நிறுவனங்கள் இந்தியர்களுக்கு நல்ல வாய்ப்பை கொடுத்து வருகின்றனர்.
வாழ்க்கையில் முன்னேற உத்வேகத்துடன் செயல்படுங்கள். நமக்கு உதவியவர்களுக்கு நன்றி கூறுங்கள். நாம் முன்னேறி, வீடு மற்றும் நாடு வளர்ச்சி அடைய உங்களின் படிப்பினை பயன்படுத்துங்கள். உங்கள் படிப்பின் மூலம் பிறர் வளர்ச்சி அடைய உதவுங்கள். நீங்கள் படித்த கல்லூரியின் தற்போதைய மாணவர்கள் வளர்ச்சி அடைய வழி சொல்லுங்கள் எனக் கூறினார்
இதனிடையே, பட்டதாரிகளுக்கு ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் தலைவர் மற்றும் நிர்வாக அறங்காவலர் எஸ்.மலர்விழி, அறங்காவலர் கே.ஆதித்யா ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களின் முதன்மை நிர்வாக அதிகாரி முனைவர் கே.சுந்தரராமன் பட்டமளிப்பு விழாவை தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் முனைவர் ஆர்.ஜெகஜீவன் கல்லூரி அறிக்கை சமர்ப்பித்தார். கல்லூரி துணை முதல்வர் முனைவர் ஆர். விஜய சாமுண்டீஸ்வரி நன்றி கூறினார். விழாவில் தேர்வுக் கட்டுப்பாட்டாளர் முனைவர் பி.மீனா ப்ரீத்தி, பட்டதாரிகள், பெற்றோர்கள், பேராசிரியர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
-சீனி, போத்தனூர்.