கேரளா மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணார் அருகே அமைந்துள்ள தனுஷ்கோடி கொச்சின் நெடுஞ்சாலையில் கேரளா எல்லையில் இருந்து கொச்சின் வரையிலான நெடுஞ்சாலை விரிவாக்கம் செய்யப்பட்டது. சில ஆண்டுகளாக செய்யப்பட்ட நெடுஞ்சாலை விரிவாக்கத்தில் லாக்காடு முதல் பவர் கவுஸ் பகுதியில் அமைந்துள்ள கேப் ரோடு என்ற இடத்தில் இரண்டு மூன்று முறை சாலைகள் இடிந்து விழுந்தது. அதனால், அதற்கு கீழே அமைந்திருந்த விவசாய நிலங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டது.
இந்த விவசாய நிலங்களுக்கு நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்று சொல்லி கேட்ட பொழுதும் சில பேருக்கு மட்டுமே நஷ்ட ஈடு கொடுக்கப்பட்டு அநேகருக்கு நஷ்ட ஈடு கொடுக்கப்படாமல் உள்ளது எனவே சிபிஐ மற்றும் காங்கிரஸ் கட்சியின் சார்பில் அனைத்து விவசாயிகளும் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்று தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அங்கு இருக்கும் குளிர் ,மழை ,அதிகமான மற்றும் மேகமூட்டத்தையும் பொருட்படுத்தாது 35 நாட்களாக தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆனால், இதை இதுவரைக்கும் அரசு எந்த விதமான முடிவும் எடுக்கவில்லை எந்த விதமான காரணங்களையும் கேட்க முன்வரவில்லை என அப்பகுதியில் உள்ள விவசாயிகள் வருத்தத்துடன் தெரிவித்துள்ளனர். போராட்டம் மீண்டும் தொடரும் எனவும் அறிவித்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திக்காக,
-ஜான்சன், மூணார்.