தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் ஒன்றியத்தில் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு தமிழ் புலிகள் கட்சியினர் கையில் தீச்சட்டி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .
இந்த ஆர்ப்பாட்டத்தின் முக்கிய கோரிக்கைகள்:
தாழ்த்தப்பட்ட அருந்ததியர் மக்கள் வாழும் பகுதியான அய்யனார்ஊத்து, ஆத்திகுளம், திருமங்கலகுறிச்சி, பல்லாங்குளம், காளாம்பட்டி, வடக்கு இலந்தைக்குளம், தீத்தம்பட்டி, கயத்தார் இந்திராநகர், கொத்தாளி, கலப்பைப்பட்டி ஆகிய கிராமங்களில் சுடுகாடு எரிமேடை, காத்திருப்போர் அறை, குடிநீர் வசதிகள், மின் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தரக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
மேலும் ஆத்திகுளம் கிராமத்தில் வசிக்கும் பெண்களுக்கு சுகாதார வளாகம் கட்ட நிலம் ஒதுக்கீடு செய்வதற்கு காலதாமதமாகுவதை கண்டித்தும் மற்றும் மேற்கு மாவட்டங்களில் நடக்கும் தீண்டாமை வன்கொடுமை தாக்குதலை நிகழ்த்தக்கூடிய சாதியவாதிகளின் மீது தீவிர சட்ட நடவடிக்கை எடுக்க கோரிக்கை.
இந்த ஆர்ப்பாட்டத்தில் வடக்கு மாவட்ட செயலாளர் வீர பெருமாள் மற்றும் வெள்ளைச்சாமி மேற்கு ஒன்றிய செயலாளர், அஸ்மத் மனிதநேய மக்கள் கட்சி மாவட்டச் செயலாளர், செய்யுது அலி கயத்தார் நகர செயலாளர், முருகேசன வில்லிசேரி வேல்முருகன் கயத்தார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-முனியசாமி, ஓட்டப்பிடாரம்.