கோவை மாவட்ட காவல் துறை சாா்பில் மிஷன் கல்லூரி திட்டத்தின் கீழ் போதையில்லா கோவை என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கல்லூரி மாணவா்களுக்கு போதைப் பொருள் தடுப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக 90032 51100 என்ற வாட்ஸ் ஆப் எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. போதைப் பொருட்கள் விற்பனை குறித்து மாணவா்கள், பொதுமக்கள் புகாா் அளிக்கலாம்என்று வாட்சப் எண்ணும் அறிமுக படுத்தியுள்ளது என்று மாவட்ட கண்கானிப்பாளர் வ.பத்ரி நாரயணன் தெரிவித்தார்!!!
நாளைய வரலாறு செய்திக்காக
-ஹனீப் கோவை.