கோவையில் இருந்து மயிலாடுதுறைக்கு இயக்கப்படும் ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் வரும், 30, 31ம் தேதி வரை ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வாரத்தின் ஆறு நாட்கள், காலை, 7:15 மணிக்கு கோவையில் புறப்படும் ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் (எண்: 12084) திருப்பூர், ஈரோடு, கரூர், திருச்சி, தஞ்சாவூர், பாபநாசம், கும்பகோணம் ஸ்டேஷன்களில் நின்று மதியம், 1:50மணிக்கு மயிலாடுதுறை சென்றடைகிறது.
மறுமார்க்கமாக, மதியம், 2:55 மணிக்கு மயிலாடுதுறையில் புறப்பட்டு, இரவு, 9:20 மணிக்கு கோவை வந்து சேர்கிறது. தற்போது திருச்சி ரயில்வே ஸ்டேஷனில் பொறியியல் மேம்பாட்டு பணி நடப்பதால். வரும் 30, 31ம் தேதி ஆகிய இரண்டு நாட்கள் ரயில் முழுமையாக ரத்து செய்யப்படுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-அருண்குமார், கிணத்துக்கடவு.