நமது கோவை பதிவு மாவட்டம் இரண்டு ஆக பிரிக்கப்பட்டு கோவை தெற்கு பதிவு மாவட்டம் கோவை வடக்கு மாவட்டம் நேற்று 21.07.2023 முதல் நடைமுறைக்கு வருகிறது. கோவை தெற்கு பதிவு மாவட்ட சார்ந்த சார்பதிவகங்கள் Joint 1, 2: பீளமேடு, சிங்காநல்லூர், மதுக்கரை, கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, நெகமம், ஆனைமலை, சூலூர், 10 சார்பதிவகங்கள் கோவை வடக்கு பதிவு மாவட்டத்திற்கு கட்டுப்பட்ட அலுவலகங்கள்.
காந்திபுரம், கணபதி, பெரியநாயக்கன்பாளையம், மேட்டுப்பாளையம் அன்னூர், வடவள்ளி தொண்டாமுத்தூர் என 7 அலுவலகங்களும் என நிர்ணயித் துள்ளனர்.இனி ஆவணப் பதிவில் சொத்து விபரத்தில் சார்பதிவகங்கள் அந்தந்த மாவட்ட தெற்கு வடக்கு என சேர்த்து தட்டச்சு செய்து பதிவை மேற்கொள்ளவும்.
தாம்பரம், கோவை மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு கானொலி மூலம் திறக்கப்படவுள்ளது. தெற்கு மாவட்ட பதிவகம் காந்திபுரம் சிங்கப்பூர் பிளாசா 5வது தளத்தில் வரும் நாட்களில் முதல் செயல்படும்..வடக்கு மாவட்ட அலுவலகம் + Joint 1 அலுவலகங்கள் பூமார்க்கட் அலுவலத்தில் செயல்படும்.
-சையது காதர், குறிச்சி.