உலகையே அச்சுறுத்தி ஆட்டிப்படைத்த கொரோனா காலத்தில் உணவின்றி, தங்க இடமின்றி, மருத்துவ உதவியின்றித் தவித்தவர்களுக்கு உதவிகளைச் செய்தவர்கள் குறித்து நாம் கேள்விப்பட்டுள்ளோம். ஆனால், கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களை அவர்களின் உறவினர்களே அடக்கம் செய்ய அஞ்சிய நேரத்தில், திருப்பூர் மாவட்டம் உடுமலையைச் சேர்ந்த தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் நண்பர்கள் இணைந்து, 60-க்கும் மேற்பட்ட, கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்துள்ளனர்.
அவ்வாறு அடக்கம் செய்யப்பட்ட ஒருவரின் குடும்பம் அதற்குக் கைமாறாக, அந்த நண்பர்கள் குழுவுக்கு 7.5 லட்சம் செலவில் ஆம்புலன்ஸ் வாங்கிக் கொடுத்து அவர்களின் சேவையை அங்கீகரித்துள்ள நிகழ்வு நடந்துள்ளது. இந்த ஆம்புலன்ஸை வருமானம் ஈட்டுவதாகப் பார்க்காமல் சேவையாகச் செய்துவரும் நண்பர்களில் ஒருவரும், ஆம்புலன்ஸின் ஓட்டுநருமான முகமது நூரூல் ஹக்கை கூறுகையில். “உடுமலைதான் என் சொந்த ஊர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் உடுமலை நகர மருத்துவ அணியில் செயலாளராக உள்ளேன். கொரோனா காலகட்டத்தில் முடியாத மக்களுக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது. பலர் உணவு, மருந்து என்று வழங்கி வந்ததால், நாமும் இதையே செய்ய வேண்டாம் என்று நினைத்தோம். கொரோனாவால் உயிரிழந்தோரை அடக்கம் செய்யக்கூட அவர்களின் உறவினர்களே தயங்கி நின்றதைத் தொலைக்காட்சியிலும் செய்தித்தாள்களிலும் பார்த்தபோதுதான், நாம் ஏன் கொரோனாவால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்யக்கூடாது என்று எண்ணம் தோன்றியது.
இதையடுத்து, த.மு.மு.க மாவட்டத் தலைவர் அப்துல் கையூம், கமாலுதீன், ஷாநவாஸ் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோர் இணைந்து கொரோனாவில் உயிரிழப்போரை அடக்கம் செய்ய முடிவெடுத்தோம். இதை எங்கள் குடும்பத்தினரிடம் சொன்னபோது, நாங்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுவிடுவோம் என அச்சமடைந்தனர். இருப்பினும், நாம் இந்த வேலையைச் செய்யாவிட்டால் யாரும் முன்னெடுத்துச் செய்ய மாட்டார்கள் என்பதை அவர்களுக்குப் புரிய வைத்த பின் அவர்களும் ஒப்புக்கொண்டனர்.
கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய அரசு மருத்துவமனையை அணுகியபோது, அடக்கம் செய்வதற்கென்று முழு உடல்கசவம் அணிவது, குழி எந்த அளவுக்குத் தோண்டுவது போன்ற சில விதிகள் உள்ளது எங்களுக்குத் தெரியவந்தது. அப்போது, உடுமலை அரசு மருத்துவமனையில் பணியாற்றிய மருத்துவர் கெளதம் கொரோனாவால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்வது குறித்த வழிமுறைகளைச் சொல்லிக்கொடுத்தார்.
அதன்பின்தான், கொரோனாவால் உயிரிழந்தவர்களின் சடலங்களை அடக்கம் செய்யத் தொடங்கினோம். கொரோனா உச்சத்தில் இருந்த காலத்தில்தான் உடுமலையை அடுத்த வாளவாடியைச் சேர்ந்த கார்த்திகேயன் என்பவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கோவையில் உயிரிழந்தார். அவரது உடலை வாளவாடியில் உள்ள அவரது தோட்டத்தில் அடக்கம் செய்து தருமாறு உறவினர்கள் எங்களை அணுகினர். நாங்களும் குழுவாகச் சென்று, அவரது உடலை குடும்ப முறைப்படி அடக்கம் செய்துகொடுத்தோம்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அதற்காக அவர்களிடம் எந்தத் தொகையும் வாங்கவில்லை. அப்போது, கார்த்திகேயன் குடும்பத்தினர் எங்களிடம் எதிர்காலத்தில் எந்த உதவி தேவைப்படும் என்றாலும் தயங்காமல் எங்களிடம் கேளுங்கள் என்றனர்.
இந்நிலையில் கொரோனா கட்டுக்குள் வந்த பிறகும், உடுமலை அரசு மருத்துவமனைக்குச் செல்வது பாதிக்கப்படுவோருக்கு உதவிகள் செய்வதென்று இருந்துவந்தோம். உடுமலை அரசு மருத்துவமனைக்கு அதிகப்படியாக சுற்றுவட்டார கிராமங்களில் இருந்துதான் மக்கள் சிகிச்சைக்காக வருவார்கள். அவர்களிடம் சில ஆம்புலன்ஸ்கள் அதிக கட்டணம் வாங்குவது தெரியவந்தது.
ஏழை மக்கள் பயன்பெற லாப நோக்கமின்றி ஆம்புலன்ஸ் சேவையைத் தொடங்கலாம் என்று நண்பர்கள் கூடி முடிவு செய்தோம். அதற்காக, தெரிந்தவர்கள் மற்றும் பொதுமக்களிடமிருந்து நிதி திரட்டத் தொடங்கினோம். அப்போதுதான், எந்த உதவியாக இருந்தாலும் அணுகுமாறு கார்த்திகேயன் குடும்பத்தினர் சொன்னது நினைவுக்கு வந்தது. இதையடுத்து, அவரின் உறவினர்களை நேரில் சந்தித்து ஆம்புலன்ஸ் வாங்கும் திட்டத்தைச் சொன்னோம்.
நாங்கள் எவ்வளவு நிதி திரட்டியுள்ளோம். ஆம்புலன்ஸ் வாங்க எவ்வளவு நிதி தேவைப்படுகிறது என்று கேட்டுத் தெரிந்துகொண்டபின், ஆம்புலன்ஸ் வாங்க ஒட்டுமொத்தமாக 7.5 லட்சம் ரூபாயை அளித்தனர். அதை வைத்தும் நாங்கள் திரட்டிய நிதியை வைத்தும் இந்த ஆம்புலன்ஸை கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு வாங்கினோம்.
இந்த ஆம்புலன்ஸை இதுவரைக்கும் லாப நோக்கத்துக்காக இயக்கினது கிடையாது. அண்மையில் உடுமலையிலிருந்து உடல்நலம் பாதிக்கப்பட்ட சிறுவனை கோவையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். மருத்துவமனையில் இறக்கிவிட்டவுடன், சிறுவனின் தந்தை யார் யாருக்கோ போண் செய்து கொண்டே இருந்தார். ஏன் என அவரிடம் கேட்டதற்கு ஆம்புலன்ஸுக்குக் கொடுக்க அவரிடம் காசு இல்லையென்பதும், அதனால் நண்பரிடம் காசு கேட்டுக்கொண்டிருந்ததும் தெரியவந்தது.
அவரிடம் எங்களுக்கு எந்தக் கட்டணமும் தொடக்கத்தில் கொரோனாவில் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்தபோது, உறவினர்கள் கூட பிணம் தூக்குறவனுக… காசுக்காக இதைச் செய்யறாங்க என்றெல்லாம் ஏளனம் செய்தார்கள். இப்பகூட சில உறவினர்கள் எங்களை வீட்டுக்குக் கூப்பிடமாட்டாங்க. அதைப் பற்றியெல்லாம் நாங்க கவலைப்படவில்லை. நாங்க அந்த நேரத்துல பிணம் தூக்குற வேலையைச் செய்ததால கொரோனாவில் இறந்த குடும்பத்தினர் எங்களை மனதார வாழ்த்தினது எத்தனை பேருக்குத் தெரியும். பிணம் தூக்குறவங்கன்னு சொன்னவங்களுக்கு, உடுமலை நகரில் பலரின் உயிரைக் காப்பாற்றிவரும் இந்த ஆம்புலன்ஸ் மூலமாதான் பதில் சொல்லிட்டு வர்றோம்” என்றார் பெருமிதமாக.
இதன் தொடர்ச்சியாக நம்மிடம் பேசிய கமாலுதீன், “இந்த ஆம்புலன்ஸில் அடிப்படை உயிர்காக்கும் ஆக்சிஜன் சிலிண்டர், குளிர்சாதன வசதி மற்றும், குளிர்சாதன சவப்பெட்டி ஆகிய வசதிகளை ஏற்படுத்தியுள்ளோம். ஆம்புலன்ஸில் வருவோரில் யார் பணம் உள்ளவர்கள், யார் பணம் இல்லாதவர்கள் என்பதுபார்த்தவுடனே தெரிந்துவிடும்.
யாரிடமும் வாடகை என்று கட்டாயப்படுத்தி வாங்குவதில்லை. பணம் இருப்போரிடம் வண்டி தேய்மானம், டீசல், ஓட்டுநரின் ஊதியத்தைக் கட்டணமாக வாங்கிக்கொள்வோம். ஏழை மக்களிடம் டீசலுக்கான தொகையை மட்டும் பெறுவோம். அதுவும் இல்லாவிட்டால் நாங்களே முடிந்த அளவு டீசலுக்கு நிதி திரட்டி அவர்களை இறக்கிவிட்டு வருவோம். இதுவரை இந்த ஆம்புலன்ஸ் மூலம் தமிழ்நாடு மட்டுமன்றி பீகார், ஆந்திரா வரை சென்றுவந்துள்ளோம்” என்றார் மனநிறைவுடன்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
சமூக சேவையில் ஈடுபடும் இஸ்லாமிய நண்பர்களின் சேவையை பாராட்டி வேற்று மதத்தைச் சார்ந்தவர்கள் உதவிக்கரம் நீட்டியது சமூக நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் நிகழ்வாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
– தமிழரசன், மேலூர்.