சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலகத்தின் முன்பு நேற்று மாலை பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அங்கன்வாடி பணியாளர்கள் கருப்புப்பட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அங்கன்வாடி மையங்களில் அதிகமாக உள்ள காலிப் பணியிடங்களால் ஒரே ஊழியர் இரண்டு, மூன்று மையங்களை பொறுப்பு பார்க்கும் நிலை உள்ளது. எனவே, காலியாக உள்ள பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். 1993, 1995 ஆண்டுகளில் பணியமா்த்தப்பட்ட அங்கன்வாடி ஊழியா்களுக்கு மேற்பாா்வையாளா்களாக உடனடியாக பதவி உயா்வு வழங்க வேண்டும். அனைத்து அங்கன்வாடி ஊழியர்களையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும். காலமுறை ஊதியம் வழங்க வேண்டும்.
சமையல் எரிவாயு சிலிண்டர் தொகையை முழுமையாக வழங்க வேண்டும். ஊழியா்கள் இல்லாத அங்கன்வாடி மையங்களை ஒன்றிணைக்கும் நடவடிக்கையை உடனடியாகக் கைவிட வேண்டும். பெண் அரசு ஊழியா்களுக்கு மகப்பேறு விடுப்பு வழங்குவதுபோல், அங்கன்வாடி ஊழியா்கள், உதவியாளா்களுக்கும் ஓராண்டு வழங்க வேண்டும். 5 ஆண்டுகள் பணிமுடித்த குறு மைய ஊழியா்களுக்கு பதவி உயா்வு அளிக்க வேண்டும்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
அங்கன்வாடி ஊழியா்களுக்கு சுகாதாரத்துறை சாா்பில் அளிக்கப்படும் பணிச்சுமையை தளா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும், ஊழியர் சேம நல நிதியை விடுவித்தல் மற்றும் சேம நலநிதியில் இருந்து கடன் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா் முழக்கமிட்டனா்.
ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் கருப்புப் பட்டை அணிந்திருந்தனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா்கள் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பினரும் வட்டாரத் தலைவருமான கவுசல்யா தலைமை தாங்கினார். செயலாளர் சித்ரா மற்றும் பொருளாளர் செல்வராணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அங்கன்வாடி ஊழியா் மற்றும் உதவியாளா்கள் சங்க உறுப்பினர்கள் ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனா்.
– ராயல் ஹமீது, சிங்கம்புணரி.