தூத்துக்குடி மாணிக்கம் மஹால் திருச்செந்தூர் ரோடு காமராசர் கல்லூரி எதிரில் நேற்று மாலை பொன்விழா எழுச்சி மாநாடு ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ‘வீர வரலாற்றின் பொன்விழா எழுச்சி மாநாடு’ மதுரையில் ஆகஸ்ட் 20ஆம் தேதி நடைபெறுகிறது.
இதில், திரளாகப் பங்கேற்பது தொடா்பாக தூத்துக்குடியில் நேற்று நடைபெற்ற மாவட்ட செயல்வீரா்-வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டம் முன்னாள் அமைச்சர் வடக்கு மாவட்டச் செயலா் கடம்பூா் ராஜு எம்எல்ஏ தெற்கு மாவட்டச் எஸ்.பி. சண்முகநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தாா்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
கூட்டத்தில் மாநாட்டு ஆலோசனைக் குழு உறுப்பினர்கள் பேசியது:
கட்சியின் மூன்றாவது தலைமுறையான பொதுச் செயலரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக சிறப்பாக செயல்படுகிறது. கட்சியை மேலும் வலுப்படுத்தி, மக்களவைத் தேர்தலில் வெற்றிபெறும் வகையில், மதுரையில் நடைபெறவுள்ள எழுச்சி மாநாட்டிற்கு இம்மாவட்டத்திலிருந்து 1.25 பேர் வரவேண்டும். இம்மாநாடு, மக்களவைத் தோ்தலில் அதிமுகவின் வெற்றிக்கு அடித்தளமாக அமையும் என்றாா்.
தூத்துக்குடியில் வருகின்ற தேர்தலில் கனிமொழி கருணாநிதி அவர்கள் தோல்வி தான் திமுகவுக்கு முடிவு கட்ட வேண்டும் இதை தூத்துக்குடி மக்கள் செய்ய வேண்டும் தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து 6 சட்ட மன்ற தொகுதிகளையும் கைப்பற்ற வேண்டும்.
கூட்டத்தில் சி.வி. சண்முகம் எம்.பி., எம்எல்ஏக்கள் திண்டுக்கல் சீனிவாசன், நத்தம் இரா. விஸ்வநாதன், கே.ஏ. செங்கோட்டையன், பி. தங்கமணி, எஸ்.பி. வேலுமணி, செல்லூா் கே. ராஜு, ஆ.பி. உதயகுமாா், வி.வி. ராஜன் செல்லப்பா, அமைப்புச் செயலா் வி. கருப்பசாமி பாண்டியன், இளைஞா்-இளம்பெண்கள் பாசறைச் செயலா் வி.பி.பி. பரமசிவம், மகளிரணிச் செயலா் பா. வளா்மதி ஆகியோரைக் கொண்ட மாநாட்டு ஆலோசனைக் குழுவின் ஆலோசனை வழங்கினார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.