தூத்துக்குடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதி முழுவதும் ஒவ்வொரு பகுதியாக வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பொதுமக்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனுக்களை பெற்று வருகிறார்.
இந்நிலையில் 9வது வார்டுக்குட்பட்ட பூபால்ராயர்புரம் மெயின் 5வது தெரு சந்திப்பு பகுதியில் நடைபெற்ற பொதுமக்கள் குறைகேட்கும் முகாமில் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றுக்கொண்டு அமைச்சர் கீதாஜீவன் குறைகளை கேட்டறிந்தார்.
அப்போது அதில் சில பகுதிகளுக்கு சீரான முறையில் தண்ணீர் வரவில்லை. சாலைகளும் சேதம் அடைந்து நிலையில் உள்ளது என்று எடுத்துக் கூறினார்கள். அனைத்து தரப்பினரின் கோரிக்கைகளும் முழுமையாக கேட்டறிந்து மாநகராட்சி சம்பந்தப்பட்ட கோரிக்கை மனுக்களை ஆணையரிடம் வழங்கி அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
பின்னர் பூபால்ராயர்புரம் மீன் மார்க்கெட் பகுதிகளில் சில குறைபாடுகள் இருப்பதை சரிசெய்ய வேண்டும் என்று மீனவர்கள் கேட்டுக்கொண்டனர். அப்பகுதியில் குடியிருக்கும் பலர் 30 ஆண்டுகளாக குடியிருந்து வருகிறோம் இன்னும் பட்டா வழங்கவில்லை அதை வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.
அவர்களிடம் கூறுகையில் இந்தபகுதியில் திமுக ஆட்சி வந்த பிறகு குறைகேட்க வந்தபோது நீங்கள் வைத்த கோரிக்கைகளின் அடிப்படையில் புதிய தார்சாலை, குடிதண்ணீர் குறைபாடுகள் தீர்க்கப்பட்டு சீரான குடிதண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இனி வரும் காலங்களிலும் அனைத்து பகுதிகளுக்கும் அமைக்கப்படாமல் உள்ள சாலைகள் முழுமையாக அமைத்து கொடுக்கப்படும்,
மேலும் மக்களுக்கு தேவையான அடிப்படை பணிகள் அனைத்தும் 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் முறையாக நடைபெறாமல் இருந்ததால் பல்வேறு குறைபாடுகள் தற்போது கண்டறியப்பட்டு அதை முழுமையாக அதிகாரிகளிடம் எடுத்துக்கூறி அனைத்து குறைகளையும் முழுமையாக நிறைவேற்றி தருவேன், விடுபட்ட பகுதிக்கும் முழுமையாக சாலை அமைத்து தரப்படும் என்று உறுதியளித்தார்.
இந்த நிகழ்வின் போது மாநகராட்சி ஆணையர் தினேஷ்குமார், மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மண்டலத் தலைவர் நிர்மல்ராஜ், உதவி செயற்பொறியாளர் சரவணன்;, கவுன்சிலர் ஜெபஸ்டின் சுதா, வட்டச்செயலாளர் கருப்பசாமி, மாவட்ட பிரதிநிதி செந்தில்குமார், திராவிடர் கழக மாவட்ட தலைவர் முனியசாமி, மாநகராட்சி சுகாதார அலுவலர் ஹரிகணேஷ், ஜெஇ கல்யாணசுந்தரம், ஆணையரின் நேர்முக உதவியாளர் துரைமணி, மற்றும் மணி, அல்பட், காசிராஜன், உள்பட பலர் கலந்து கொண்டனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-மாரிதாஸ், தூத்துக்குடி தெற்கு.