கோவை விநாயகபுரம் விளாங்குறிச்சி ரோடு அன்னை வேளாங்கண்ணி தெருவை சேர்ந்தவர் ரமேஷ்குமார் (வயது56). இவர் கோவை ராஜவீதியில் நகை கடை நடத்தி வருகிறார். ரமேஷ்குமாருக்கு கோவை செட்டிவீதியை சேர்ந்த நகை வியாபாரி ரகுநாத் (43) என்பவருடன் தொழில் ரீதியான பழக்கம் ஏற்பட்டது.
ரகுநாத், ரமேஷ்குமாரிடம் தங்கம் வியாபாரம் செய்து வருவதாக அவரிடம் கூறியுள்ளார்.
இதனை உண்மையென நம்பிய ரமேசும் 1 வருடங்களுக்கு முன்பு 2 கிலோ தங்கத்தை ரகுநாத்திடம் விற்பதற்காக கொடுத்துள்ளார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
நீண்ட நாட்கள் ஆகியும் ரகுநாத் அதற்குண்டான பணத்தை திருப்பி கொடுக்காமல் இருந்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த ரமேஷ் தங்கத்தை திருப்பி கேட்டுள்ளார். இதனால், ஏமாற்றமடைந்த நகைக்கடை உரிமையாளர் ரமேஷ்குமார் பெரியகடைவீதி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் ஏமாற்றுதல், நம்பிக்கை மோசடி ஆகிய 2 பிரிவுகளின் கீழ் ரகுநாத் மற்றும் அவரது மனைவி மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-அருண்குமார், கிணத்துக்கடவு.