தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் உள்ள புதியம்புத்தூர் அருகே நடுவக்குறிச்சியில் ஸ்ரீ சந்தன மாரியம்மன் ஸ்ரீ சுடலைமாடசாமி கோவில் திருவிழாவை முன்னிட்டு மாட்டு வண்டி பந்தயம் மற்றும் குதிரை வண்டி பந்தயம் மாபெரும் அன்னதான நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
பெரிய மாடு மற்றும் சின்ன மாடு தேன் சிட்டு என மூன்று பிரிவாக மாட்டு வண்டி எல்லை பந்தயம் நடைபெற்றது. இந்த மாட்டு வண்டி பந்தயத்தை லட்சுமணன் அவர்கள் மற்றும் முருகன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர், சாமிநத்தம் ஆகியோர் தொடங்கி வைத்தார்கள்.
இந்த பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் முதல் பரிசு ரூபாய் 50,000 வழங்கியவர் லட்சுமணன் அவர்கள் தொழில் அதிபர் கோவை, இரண்டாம் பரிசு ரூபாய் 40 ஆயிரம் வழங்கியவர் பொன்முருகன் அவர்கள் புதூர் பாண்டியாபுரம், மூன்றாவது பரிசு ரூபாய் 30,000 வழங்கியவர் செந்தில் கோவை. சின்ன மாடு பந்தயத்தில் பரிசு ரூபாய் 30,000 வழங்கியவர் ராமச்சந்திரன் அவர்கள் , இரண்டாம் பரிசு 20 ஆயிரம் வழங்கியவர் முத்து பெருமாள் கோவை, மூன்றாம் பரிசு 15 ஆயிரம் ரூபாய் வழங்கியவர் ஆனந்தகுமார் மேட்டூர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
குதிரை வண்டி பந்தயத்தை துவக்கி வைத்தவர் முருகன் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சாமி நத்தம், குதிரை வண்டி பந்தயத்திற்கு முதல் பரிசு ₹15,000 வழங்கியவர் மாரிமுத்து பெங்களூர், மகேஷ்குமார் புதியம்புத்தூர், இரண்டாவது பரிசு 12000 வழங்கியவர் முத்து ராமகிருஷ்ணன் போடம்மாள்புரம், மூன்றாவது பரிசு 9000 வழங்கியவர் ஆர்எஸ்எஸ் ரமேஷ் சிலோன் காலனி.
பின்னர் பொதுமக்கள் பக்தர்கள் அனைவருக்கும் மாபெரும் கறி விருந்து அன்னதானம் வழங்கப்பட்டது அதற்கு அன்பளிப்பு வழங்கியவர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் முருகன் சாமி நத்தம் மற்றும் பல தொழிலாளர்கள் அன்பளிப்பு வழங்கி இருந்தார்கள்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-முனியசாமி, ஓட்டப்பிடாரம்.