தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதியில் புதியம்புத்தூரில் தினம் தினம் எரிந்து கொண்டிருக்கும் குப்பையால் அதிலிருந்து வரும் புகையால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகிறார்கள்,சுற்றுச்சூழலும் தினந்தோறும் பாதிக்கப்படுகிறது.
புதியம்புத்தூரில் இருந்து தட்டப்பாறை செல்லும் வழியில் புதியம்புத்தூர் காவல் நிலையம் அருகில் தினந்தோறும் குப்பை எரிந்து கொண்டிருக்கிறது அதிலிருந்து வரும் புகையால் கண் எரிச்சல் மற்றும் வாகன ஓட்டிகள் , நடந்து செல்லும் மக்களும் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
காவல் நிலையம் அருகில் ஆரம்ப சுகாதார நிலையமும் உள்ளது. நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் குடும்பங்கள் அருகில் வசிக்கின்றனர். இந்த வழியாக பள்ளி செல்லும் வாகனங்கள், கல்லூரி வாகனங்கள் அரசு பேருந்துகள் இருசக்கர வாகன ஓட்டிகள் என அனைத்து தரப்பு மக்களும் தினந்தோறும் புகையை கடந்து செல்ல வேண்டிய நிலையில் உள்ளனர். இதை யாரிடம் சொல்ல எங்க சொல்ல என பொதுமக்கள் புலம்பி கொண்டிருக்கிறார்கள். புதியம்புத்தூர் பஞ்சாயத்து நிர்வாகம் இதற்கு ஒரு நிரந்தர தீர்வு காண வேண்டும் , சுற்றுச்சூழல் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் .
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-முனியசாமி, ஒட்டப்பிடாரம்.