தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் வ உ சி கல்லூரியில் இருந்து சிதம்பரம் நகர் பேருந்து நிறுத்தம் வரை பேரணியாக செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. பின்னர் அனைவரும் தரையில அமர்ந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் அவர்கள் கோரிக்கை :
காலை உணவு திட்டத்தை சத்துணவு ஊழியர் மூலம் அரசை ஏற்று நடத்திட வேண்டும், போர்க்கால அடிப்படையில் காலி பணியிடங்களை உடனே நிரப்பிட வேண்டும், தேர்தல் கால வாக்குறுதியான காலை முறை ஊதியம் மற்றும் அகவிலை படியுடன் கூடிய ஓய்வூதியம் வழங்கிட வேண்டும், சத்துணவு மையங்களுக்கு தேவையான எரிவாயு உருளையே அரசே ஏற்று வழங்கிட வேண்டும் , சத்துணவு அமைப்பாளர்களுக்கு ஓய்வு பெறும் வயதை 60 இலிருந்து 62 ஆக உயர்த்திட வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
பின்னர் ஆர்ப்பாட்டத்தில் பேசிய சத்துணவு சங்க தலைவர்கள் நாங்கள் தொடர்ந்து பல போராட்டங்களை நடத்தி வருகிறோம் எங்களது கோரிக்கைகளை அரசு நிறைவேற்றுவதாக தெரியவில்லை ஆகையால் வரும் பாராளுமன்றத் தேர்தல் மற்றும் சட்டமன்றத் தேர்தலில் எங்களது ஊழியர்கள் 3 லட்சம் பேர் அரசுக்கு எதிராக வாக்களிக்க முடிவு செய்துள்ளோம் என பேசினார்கள்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் பாண்டியன் மாவட்ட தலைவர் தமிழ்நாடு சத்துணவு சங்கம் , ஜெயலட்சுமி மாவட்ட செயலாளர் தமிழ்நாடு சத்துணவு சங்கம், கட்டபொம்மன் சத்துணவு மற்றும் அங்கன்வாடி சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர்களும், கண்ணன் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில துணைத் தலைவன ,பாக்கியசீலி தமிழ்நாடு சத்துணவு சங்கத்தின் மாநில தணிக்கையாளர் , கனகவேல் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் மாநில துணைத் தலைவர், சண்முக லட்சுமி மாவட்ட பொருளாளர் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-முனியசாமி, ஓட்டப்பிடாரம்.