கோவை மாவட்டம் போத்தனூர் அம்மன் நகர் extension பகுதியில் கோவை மாநகராட்சி பாதாள சாக்கடை பணிகள் உடைய ஒப்பந்ததார்கள்,கழிவு நீர் செல்ல பாதாள, சாக்கடை அமைக்கும் பணிகளை தற்போது தொடங்கி உள்ளனர்.
இதில் வேலையை சரிவர செய்யாமல்,வாரத்தில் இரு நாட்கள் செய்வது,வேலையை அப்படியே கிடப்பில் போடுவது என மாநகராட்சி ஒப்பந்ததாரர்கள் மெத்தனம் காட்டி வருகின்றனர். இதனால் அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். அனைத்து இடங்களிலும் குழிகளை எடுத்து அப்படியே விட்டு இருப்பதால் குழந்தைகள் தவரிவிலும் நிலை ஏற்பட்டுள்ளது.
பணிகளை விரைவில் முடிக்காமல் இருந்தால், இந்த ஒப்பந்ததாரர்கள் உடைய மெத்தன போக்கை கண்டித்து சாலை மறியல் செய்வதாக போத்தனூர் அம்மன் நகர் extension மக்கள் தெரிவித்துள்ளனர்.
நாளைய வரலாறு செய்திகளுக்காக,
-V. ஹரிகிருஷ்ணன்.