சென்னை மயிலாப்பூர் பல்லக்கு மாநகர் பகுதியைச் சேர்ந்தவர், டொக்கன் ராஜா(40). இவர் பிரபல கூலிப்படை கும்பல் தலைவன் சிடி மணியின் கூட்டாளி ஆவார். இவர் மீது ஒரு கொலை வழக்கு உட்பட 25 வழக்குகள் உள்ளன. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பாஜகவில் இணைந்த இவருக்கு பாஜக பட்டியல் அணி மாவட்ட செயற்குழு உறுப்பினராக பதவி வழங்கப்பட்டது.
கடந்த ஆண்டு இறுதியில் வழக்கு ஒன்றில் ஜாமீன் பெற்று வெளியே வந்த டொக்கன் ராஜா, அதன் பின் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்துள்ளார். தலைமறைவாக இருந்து வந்த டொக்கன் ராஜாவை, கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் துரைப்பாக்கத்தில் பதுங்கி இருந்தபோது ரவுடிகள் தடுப்பு பிரிவு போலீசார் அவரை பிடித்து மயிலாப்பூர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனையடுத்து காவல் துறையினரின் விசாரணைக்குப் பின் டொக்கன் ராஜாவை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். கடந்த டிசம்பர் மாதம் சிறையில் இருந்து வெளிவந்த டொக்கன் ராஜா மயிலாப்பூர் பகுதிக்கு செல்லாமல் மதுராந்தகம் பகுதியில் வசித்து வந்தார்.
நாளைய வரலாறு புலனாய்வு இதழின்,,,,
மேலும் பல முக்கிய காணொளி செய்திகள் காண,
Please Subscribe to This Channel to get current news ↓
https://www.youtube.com/channel/UCBXly8ucYf64DrK5QkzMOZQ
இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு சிறையில் இருந்து வெளியே வந்த டொக்கன் ராஜா மீண்டும் குற்ற செயல்கள் மற்றும் கட்டப்பஞ்சாயத்து உள்ளிட்டவைகளில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் சிறையில் இருந்து வெளிவந்த டொக்கன் ராஜா மயிலாப்பூர் பகுதிக்குச் செல்லாமல் மதுராந்தகம் பகுதியில் வசித்து வந்தார். இந்த நிலையில் டொக்கன் ராஜாவின் சகோதரர் மகள், பார் கவுன்சிலில் பதிவு செய்து நாளை முதல் நீதிமன்றத்திற்குச் செல்ல இருந்ததால், அவரை வாழ்த்தி வழி அனுப்புவதற்காக மதுராந்தகத்திலிருந்து மயிலாப்பூர் பல்லக்கு மாநகருக்கு டொக்கன் ராஜா வந்தார்.
இதற்கிடையில் டொக்கன் ராஜாவின் சகோதரர் மகள் பார் கவுன்சிலில் பதிவு செய்து இன்று முதன் முதலில் நீதிமன்றத்திற்கு செல்ல இருந்ததால், அவரை வாழ்த்தி வழி அனுப்புவதற்காக நேற்று மதுராந்தகத்திலிருந்து மயிலாப்பூர் பல்லக்குமாநகருக்கு ரவுடி டொக்கன் ராஜா வந்துள்ளார். நேற்று இரவு பல்லக்குமாநகரில் உள்ள அவரின் வீட்டிலிருந்து வெளியே வந்த டொக்கன் ராஜாவை இருசக்கர வாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட அடையாளம் தெரியாத கும்பல் வழிமறித்தது.
திடீரென டொக்கன் ராஜாவை வழிமறித்து ஓட ஓட விரட்டி சென்று வெட்டி கொலை செய்துவிட்டு கும்பல் தப்பி சென்றது. பின்னர் அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் அங்கு சென்ற மயிலாப்பூர் போலீஸார் ராஜா உடலை கைப்பற்றி ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், மேலும் இக்கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
முதற்கட்ட விசாரணையில், கடந்த 2001-ம் ஆண்டு ரவுடி துரைக்கண்ணு என்பவரை டொக்கன்ராஜா கூட்டாளிகள் கொலை செய்தனர். இதற்கு பழிவாங்கும் விதமாக டொக்கன் ராஜா கேங்கை சேர்ந்து ரவுடி பாலாஜியை துரைகண்ணு கூட்டாளிகள் வெட்டி படுகொலை செய்தனர். இதற்கு பழிவாங்க எண்ணிய டொக்கன்ராஜா கேங் கடந்த 2003-ம் ஆண்டு ரவுடி கதிரவனை கொலை செய்தனர். அப்போது 3 வயது குழந்தையாக இருந்த கதிரவனின் மகன் நரேஷ் மற்றும் அவரது மனைவி இச்சம்பவத்திற்கு பின்னர் மயிலாப்பூரில் இருந்து வீட்டை காலி செய்துவிட்டு கண்ணகிநகருக்கு குடி பெயர்ந்தனர்.
தனது தந்தை கொலைக்கு பழிவாங்க எண்ணிய நரேஷ் இதற்காக 20 ஆண்டுகள் காத்திருந்ததுடன் தந்தையை போல் தானும் ரவுடியாக வளர்ந்தார். 20 ஆண்டுகளுக்கு பிறகு நரேஷ் நேற்று டொக்கன் ராஜா தனது வீட்டிற்கு வருவதை அறிந்து கொண்டு இரவு தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து டொக்கன் ராஜாவை கொலை செய்து தெரியவந்தது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக அருகிலிருந்த சிசிடிவி காட்சிகளை வைத்து தப்பி ஓடிய நரேஷ் மற்றும் அவனது கூட்டாளியை போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர். குறிப்பாக 20 ஆண்டுகள் கழித்து, தனது தந்தையைக் கொலை செய்தவரை, அவரது மகன்கள் பழிதீர்த்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
-தமிழரசன், மேலூர்.